மூவர் கொலை வழக்கு : துப்பாக்கி கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கைது!
சென்னை மூவர் கொலை வழக்கு தொடர்பாக துப்பாக்கி கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ராஜீவ் துபே கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சவுகார் பேட்டையில் உள்ள குடியிருப்பில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த தலில்சந்த் அவரது மனைவி புஷ்பா பாய், அவரது மகன் ஷீத்தல் சந்த் ஆகிய 3 பேரும் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கைலாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றவாளிகள் யார் என சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டு கைலாஷ் மற்றும் அவரது கூட்டாளியான ரவீந்திரநாத் விஜய் உத்தம் கமல் ஆகியோர் கைது செய்யப்பட்டு யானைக்கவுனி போலீசார் காவலில் உள்ளனர். இவர்களை கடந்த 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்ற நிலையில், முக்கிய குற்றவாளியான ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் ஆக்ராவில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி முன்னாள் ராணுவ அதிகாரி அவர்களுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் முன்னால் ராணுவ அதிகாரி ராஜிவ் துபே மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி மது துபே அவர்களின் பெயரில் இருந்ததும் தெரியவந்துள்ளது. சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஜெய்ப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் தொடர்பான விசாரணைக்காக ராஜீவ் துபேமற்றும் அவரது மனைவி மது துபே ஆகியோர் நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு இருவரிடமும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.