“எச்.ராஜாவை கண்டித்து போராட்டம்”
எச்.ராஜாவை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறநிலையத்துறையினர் உண்ணாவிரதம்
சென்னை:
சிலை கடத்தல் முறைகேடு தொடர்பாக அறநிலையத்துறை ஊழியர்கள் குறித்து தரக்குறைவாக பேசி சர்ச்யையை ஏற்படுத்திய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து இன்று அறநிலையத்துறையினர் உண்ணாவிரத போராட்டம் இருக்கின்றனர்.
பாஜக தேசியச் செயலாளர் அறநிலைதுறை மீது கலங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்துடன் பல இடங்களில் பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் உயர்நீதி மன்ற விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், சிலை கடத்தலில் இந்து சமய அறநிலையத் துறையையும், அறநிலையத்துறை ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். மேலும் அறநிலைத்துறையில் பணிபுரிபவர்களின் குடும்பங்களையும், அவர்கள வீட்டு பெண்களையும் தரக்குறைவாக பேசி வருகின்றார்.
இதுதொடர்பாக அறநிலையத்துறை ஊழியர்கள் எச்.ராஜா மீது புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
DINASUVADU