சென்னை போக்குவரத்தில் அதிரடி மாற்றங்கள்.. பாடல் இல்லை.. மெரினாவில் வாகன அனுமதியில்லை…

Chennai traffic

சென்னை பிரதான சாலைகளில் இனி பாடல்கள் ஒளிபரப்பட மாட்டாது. மெட்ரோ பணிகள் காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதியில்லை.

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் சாலை வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல தற்போது மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இன்னும் ஒரு வருடத்திற்கு மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவ. த்துள்ள்ளது

சென்னை  கலங்கரை விளக்கம் முதல் காந்தி சிலை வரையிலான சர்வீஸ் சாலையில் மட்டும், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் ஒலி மாசு அதிகரித்து வருவதன் காரணமாக சென்னை பிரதான சாலையில் உள்ள சிக்னல்களில் ஒலித்து வந்த பாடல்கள் தற்போது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.  பாடல்களை ஒலிபரப்ப வேண்டாம் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இது குறித்த அறிவிப்பை போக்குவரத்து ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார். விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், போக்குவரத்து போலீசார் பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்