பள்ளி மாணவிக்கு அரிவாள் வெட்டு !!! ஒரு தலை காதலால் நேர்ந்த சோகம் !!!
சென்னை காசிமேடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் ரக்சிதா என்னும் மகள் இருக்கிறாள்.
கடந்த 17.01.19 அன்று இரவு மாணவி ரக்சிதாவை ராயபுரம் ஜி.எம்.பேட்டை பகுதியில் சேர்ந்த மதன் மற்றும் அவருடைய நண்பர் சிவா ஆகியோர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதனால் மாணவி ரக்சிதாவுக்கு இடது தோள் பட்டையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாணவி ரக்சிதா காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மதன் என்பவர் மாணவி ரக்சிதாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனை மனைவி ரக்ஷிதா கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மதன் கடந்த 17.01.19 இரவு மாணவி ரக்ஷிதாவை ஆபாசமாக பேசி அரிவாளால் வெட்டியுள்ளார். இந்த இரு நபர்களையும் போலீசார் தீவீரமாக தேடி வருகின்றனர்.