பாலியல் புகார் …!லீனா மணிமேலைக்கு எதிராக நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார்…!
கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார்.
இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை.
ஆனால் இவரது குற்றச்சாட்டு தொடர்பாக இயக்குநர் சுசி கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுகிறார்.லீனா மணிமேகலை கூறிய புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் சொல்வதெல்லாம் இட்டுக்கட்டிய பொய் என்று இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்தார்.
இந்நிலையில் கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார்.கவிஞர் லீனா மணிமேலை மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குநர் சுசி கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.