ஆர்.கே.நகரில் தேர்தல் செலவினப் பார்வையாளரை அப்பகுதி மக்கள் முற்றுகை!
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளருக்குப் பணம் கொடுக்க வைத்திருந்ததாக ஒருவரைப் பிடித்த தேர்தல் செலவினப் பார்வையாளரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
காசிமேட்டை அடுத்துள்ள செரியன் நகர் முதலாவது தெருவில் தேர்தல் செலவீன பார்வையாளர் சில் ஆசிஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டிடிவி தினகரன் அணியைச் சார்ந்த ஒருவர் வீடு வீடாகச் சென்றுள்ளார். அவரை சில் ஆசிஸ் விசாரித்ததில், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்தது. பின்னர் நடத்திய சோதனையில் அவரிடம் இருந்த 3000 ரூபாயையும் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை விட்டு விட்டு, சுதாகரிடமிருந்த சொந்தப்பணத்தை பறிமுதல் செய்ததாக குற்றம் சாட்டினர். சில் ஆசிஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்தப் பொதுமக்களிடமிருந்து தேர்தல் செலவீனப் பார்வையாளர் ஆசிசை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
sources: dinasuvadu.com