இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , தனது சொந்த சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் அங்கு மழை பெய்த காரணத்தால் சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
கொளத்தூர் தொகுதியில் பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மழையால் ரத்து செய்யப்பட்டது . இதனை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன் பிறகு, திருவிக நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளையும், மின்சாரத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடங்களையும், மழைநீர் சேகரிப்பு மையங்களையும் பார்வையிட்டார். மேலும், உணவு பொருள் வழங்கள் கட்டடங்களை பார்வையிடுகிறார்.
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் சேகர் பாபு, துரைமுருகன் , கே.என்.நேரு சென்னை மேயர் பிரியா ராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். கொளத்தூர் தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக…
காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை…