தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.!
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதனை ஏற்று , குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தற்போது சென்னைக்கு வரும் 6அம தேதி வருவது உறுதியாகியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர்.