சென்னையில் 40 கி.மீ வேகத்தை தாண்டி வாகனத்தை ஓட்டினால் அபராதம்..! காவல் ஆணையர் எச்சரிக்கை..!
சென்னையில் 40 கி.மீ வேகத்தை தாண்டி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை.
சென்னையில் 40 கி.மீ வேகத்தை தாண்டி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வேக கட்டுப்பாட்டு விதிமுறை சென்னையில் உள்ள 10 இடங்களில் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேட்டியளித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நிர்ணயிக்கப்பட்டுள்ள 40 கி.மீ வேகத்தை மீறி, செல்லும் வாகனங்களை கண்டறிய 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பகலில் 40 கி.மீ வேகத்தையும், இரவு 50 கி.மீ வேகத்தையும் தாண்டி வாகனம் ஒட்டினால், 30 தானியங்கி ஸ்பீடு ரேடார் கருவி மூலம், வாகனத்தை புகைப்படம் எடுத்து, தானாகவே சலான் (Challan) அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.