தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவர், தனது குடும்பத்துடன் சென்னை சோழிங்கநல்லூரில் வசித்து கால் டாக்சி ஓட்டி வருகிறார். கடந்த 24 -ம் தேதி அன்று வாடிக்கையாளர் அழைப்பிற்காக அபிராமபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த மற்றொரு கார் பலமாக மோதியது. வங்கி கடன் பெற்று வாங்கிய தனது கார் சேதமடைந்ததால் அதிர்ச்சியடைந்த மைக்கேல் ராஜ் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த விபத்தை ஏற்படுத்திய தன்ஷீர், தனது நண்பர்களை செல்போனில் அழைக்க, […]
சென்னையில் புத்தாண்டு அன்று குடிப்போதையில் வாகனம் ஒட்டி பிடிபட்ட 125 பேருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று கிடைக்காது என தமிழக போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பாஸ்போர்ட் கிடைக்காது என புத்தாண்டுக்கு முன்பாகவே காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கால்நடைகளை சாலைகளில் உலவ விட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதுடன், பராமரிப்புக் செலவுக்கென 750 ரூபாய் வசூலிக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பிடித்து வைக்கப்படும் கால்நடைகளின் காதுகளில் சீரியல் எண்களுடன் கூடிய tag ஒட்டப்படும். இனி இதுபோன்று சாலைகளில் கால்நடைகள் அவிழ்த்து விடப்படமாட்டாது என 20 ரூபாய் முத்திரைத் தாளில் உரிமையாளர் எழுதி கொடுத்தால் மட்டுமே கால்நடைகள் விடுவிக்கப்படும். […]
சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரெய்மான் என்பவர் லேங்ஸ் கார்டன் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது தடுப்புச் சுவரில் மோதித் தலையில் காயமடைந்து உயிரிழந்தார். ஆவடி இஎஸ்ஐ அண்ணாநகரைச் சேர்ந்த பால் என்பவர் ஆவடி பேருந்து பணிமனை எதிரே சாலைத் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தார். நேற்று நள்ளிரவில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட சாலை விபத்துக்களில் 177பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 84பேர் ராயப்பேட்டை, சென்ட்ரல், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், […]
சென்னையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர்- விழுப்புரம் செல்லும்போது மின்சார ரயிலில் மீது மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பிற்கு உள்ளானது,இந்த இக்கட்டான சூழ்நிலையை சந்திக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தமுயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதனை கடத்திவந்த சென்னையைச் சேர்ந்த ஆறுமுகவேல் என்ற பயணியிடம் சுங்கத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை ஆவடி அருகே நேற்று இரவு 2 ரயில் பேட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 13 நேரத்திற்கு பிறகு தற்போது அந்த வழித்தடமானது சரி செய்யப்பட்டது இதன் மூலம் அந்த வழியாக ரயில்சேவை மீண்டும் இயக்கப்பட்டன. source : dinasuvadu.com
ஆவடி ரயில் நிலையம் அருகே மிலிட்டரி சைடிங் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் சென்னை சென்டரல் இருந்து ஆவடி வரை ரிருமார்க்கமாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல்லூரிலிருந்து சூரபெட்டை செல்லும் ரயில், சூரபபேட்டையிலிருந்து, சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில், திருப்பதியிலிருந்து செல்லூர் செல்லும் ரயில் என குறிப்பிடப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. source : dinasuvadu.com
தேர்தல் முடிந்தாலும் இன்னும் பரபரப்பான தொகுதியாகவே இருந்து வருகிறது ஆர்.கே.நகர் தொகுதி. கொருக்குபேட்டையில் 20 ரூபாய் டோக்கன் மூலம் 450 பேருக்கு பணம் பட்டுவாடா செய்ததாக டிடிவி ஆதரவாளர்கள் 4 பேரை ஆதாரத்துடன் போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்.கே.நகருக்கு உட்பட்ட கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகரில் ஜான் பீட்டர் என்பவரிடம் தகராறில் ஈடுபட்ட சிலர் 20 ரூபாய் நோட்டை கொடுத்து பணம் தருவதாக வாக்குறுதி அளித்தது போல், தேர்தல் முடிவு வந்த பின்னர் பணம் தரவில்லை என […]
சென்னையில் தொழிலதிபரை கொலை செய்த கார் ஓட்டுநர் கூலிப்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், கொலை செய்ய கூலிப்படையினரை ஏவி விட்ட தொழிலதிபரின் சகோதரர் உள்ளிட்ட 8 பேரை கொரட்டூர் போலீசார் கைது செய்தனர். ஈக்காட்டுதாங்கல் ஜோதி நகரைச் சேர்ந்த உதயபாலன் என்பவர் திருமுடிவாக்கத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கு ஆலையை நடத்தி வந்தார். இவர் கடந்த ஐந்தாம் தேதி தமது வீட்டு படுக்கையறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கு கிண்டி போலீசாரிடம் இருந்து மத்திய […]
சென்னை; சென்னையில் 32வது பொறியாளர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசிய அவர் தமிழகத்தில் பிறந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த அப்துல் கலாமை நாம் அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்… sources; dinasuvadu.com
சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் ஜி.டி விரைவு ரயில் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வழக்கமாக இன்று இரவு 7.15-க்கு பதிலாக இரவு 8.45க்கு புறப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் சென்னை சென்ட்ரல் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் இன்று இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 10.45 க்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. source : dinasuvadu.com
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்வதேச திரைபடவிழாவில் பல்வேறு விருதுகள் பல நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்படும் . இந்த வருடம் நடைபெற்ற 15 வது சர்வதேச திரைபட விழாவில் சிறந்த தமிழ்படமாக இரு படங்கள் தேர்வு செய்யப்பட்டன . ஒரு கிடாயின்கருணைமனு , விக்ரம் வேதா தேர்வு செய்ய பட்டது . இதில் கிடைத்த பரிசு தொகை 1 லட்சத்தை நடிகர்.விஜய்சேதுபதி இந்தோ சினி அப்ரிசியன்ஸ் அமைப்புக்கு திருப்பி அளித்தார் . இவை பல சமூக வலைதலங்களில் வைரலாக […]
சென்னை; ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜனவரி 7ஆம் தேதியன்று சென்னை கிழக்குக்கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்கள் பல்வேறு அணிகளாக வந்து களமிறங்கவுள்ளனர்… sources; dinasuvadu.com
சென்னை; அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கருக்கு பகுதியில் வாகனத் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கி விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததால் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. […]
நேற்று நடந்த ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் மொத்தம் 77.68% வாக்குகள் பதிவாகி உள்ளது. தொகுதி முழுவதும் 50 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் ‘விவிபேட்’ இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மேலும் காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கெடுப்பிற்கு மக்கள் அதிக ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது ஆர்.கே. நகரில் 72.67 […]
தேர்தல் ஆணையம், சிறப்பு பார்வையாளர் என யாரும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை; தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்வி குறியாகியுள்ளது – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ… source: dinasuvadu.com
166 பயணிகளுடன் சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் நடுவானில் பழுது சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கம்- 166 பயணிகளும் பாதுகாப்பாக தங்கவைப்பு… source: dinasuvadu.com
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய அச்சகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே தமிழக அரசு கிளை அச்சகம் உள்ளது. இதில் 2000ம் ஆண்டு வாங்கிய இயந்திரம் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 16 பிரதிகள் மட்டுமே எடுக்க முடியும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள், காவல்துறை என பல தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டிய நீதிமன்ற உத்தரவு நகல்கள், வழக்கு குறித்த விவரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகினர். இந்த […]
ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 21ம் தேதி வரை மதுபான கடைகள் மூடல் – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிச.24ம் தேதியும் ஆர்.கே.நகரில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் அறிவிப்பு. source: dinasuvadu.com