சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் நாயக்கர் தெருவை சேர்ந்த கந்தன் என்பவர் தமது மகளை கல்லூரிக்கு விடுவதற்கு இரு சக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தார். முப்பாத்தம்மன் கோயில் எதிரே வந்தபோது, அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கந்தனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் கந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரவுடி லோகு என்பவருக்கும், கந்தனுக்கும் முன்விரோதம் இருந்ததாக […]
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நாளை தொடங்கி வரும் 22ம் தேதி வரை 41வது புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. அனைத்து தரப்பினரையும் புத்தகக் கண்காட்சிக்கு ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் இந்த வருடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார் சென்னை புத்தக கண்காட்சியின் தலைவர் வைரவன். இந்த வருடம் மொத்தம் 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 340 பதிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் 10 லட்சம் புத்தகங்கள் […]
சென்னை மயிலாப்பூர் பி.எஸ். பள்ளி வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் முயற்சியில் 2 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன. பள்ளி வளாகத்தில் குவித்து வைத்து இருந்த குப்பை குவியலால் திடீரென தீ பற்றி அந்த வளாகம் தீப்பற்றி கொண்டது. இதனால் சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். source : dinasuvadu.com
சென்னை விமானநிலையத்தின் முதல் கட்ட விரிவாக்கம் நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் இரண்டாம் கட்ட விரிவாக்கம் நவீன முறையில் நடக்கவுள்ளது. இதை சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம் போல அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். இதை பற்றி பேசிய அதிகாரிகள் கூறியது என்னவென்றால், இரண்டாம் கட்ட விரிவாக்கம் செய்யப்போகும் ஊழியர்கள் சிங்கப்பூர் விமனநிலையத்தை வடிவமைத்தவர்கள். அதனை போலவே இங்கேயும் செய்யவுள்ளதாக கூறுகிறார். மேலும் இதன் வடிவமைப்பில் தமிழ் கலாச்சாரத்தையும் இணைக்கவுள்ளார்களாம். தனித்துவம் கொண்ட சர்வதேச வசதிகளுடன் இது திகழும் என்று கூறியுள்ளனர்.
சென்னை சாந்தோமில் அரசு பேருந்து மோதியதால் பட்டினப்பாக்கம் டுமில்குப்பம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து ஏற்படுத்தியதாக கண்ணகி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற தற்காலிக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமுறை நடந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் போது கூட தற்காலிக ஓட்டுனர்களால் இம்மாதிரியான விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டு, 57 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், திருட்டு வீடியோ தயாரித்த 242 பேர் கைது செய்யப்பட்டு, 8,70,68,000 ரூபாய் மதிப்பிலான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆன் லைன் மோசடி செய்தவர்களிடமிருந்து 3,38,00,000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மல்லிகா கூறினார். … source: dinasuvadu.com
சென்னையில் நாளை வார நாட்களைப்போல் அனைத்து மின்சார, விரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது.போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் ரயில்வே துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் சென்னை மத்திய குற்றப்பிரிவில் 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 559 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 2017ல் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 57 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவை ரத்து! பொதுமக்கள் அவதி, கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் பலர் ரெயில் சேவையையை நம்பியே வேலைக்கும், பள்ளி, கல்லூரிக்கும் சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் ரெயில்சேவையை குறைத்தும், ரத்தும் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ரெயில் சேவை மாற்றம் மற்றும் ரத்து குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.15, 9.30, 11.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 10.50, […]
போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கால் சென்னையில் குறைந்தளவு பேருந்துகளே இயக்கப்படுகிறது. திருவான்மியூரில் உள்ள மொத்தம் 106 பேருந்துகளில் வெறும் 39 பேருந்துகளும், தாம்பரத்தில் உள்ள 190 பேருந்துகளில் வெறும் 58 பேருந்துகளும், குரோம்பேட்டையிலிருந்து செல்லும் 200 பேருந்துகளில் வெறும் 45 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்,ஆகையால் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசை வேண்டுகின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று சென்னையில் பைக் ரேசர்கள் அதிகமாக சாகசங்கள் செய்தனர். இதனால், சென்னையில் மட்டும் பல விபத்துகள் நடந்தன. இதில் ஒரு பைக் ரேஸ் கும்பலொன்று சாலையில் இருக்கும் தடுப்புவேலியை இழுத்து சென்றன, இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த கும்பலை பிடிக்க தற்போது சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்து அவர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளது. source : dinasuvadu.com
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கபடுகின்றது . சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கட்டணமின்றி தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது…இதனால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் …. source: dinasuvadu.com
ஆர்கே நகர் இடைதேர்தலில் டிடிவி.தினகரன் சுய்ர்ட்சையாக போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அனைத்து கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் நடிகர் கமல்ஹாசனும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆர்கே நகர் இடைதேர்தலில் ஜனநாயகம் தோற்று விட்டது என்பது போல் டிவிட் செய்திருந்தார். அதற்க்கு பதிலளிக்கும் விதமாக டிடிவி.தினகரன் ஆர்கே நகர் மக்களை இழிவுபடுத்தும் விதமாக கமலஹாசன் கருத்து சொல்லியிருக்கிறார். என்று கூறியிருந்தார். இந்நிலையில் டிடிவி ஆதரவாளர்கள் ஆர்கே நகரில் கமலஹாசனுக்கு எதிராக போராட்டம் […]
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க திட்டம் துவங்கியுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் 67 வருவாய் கிராமங்களைச் சேர்த்து 122 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசு செய்திக்குறிப்பில் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் 16 வட்டங்களை உள்ளடக்கி சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது சென்னையிலுள்ள 57 இடங்களுடன் மேலும் 67 கிராமங்கள் இணைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன. இந்தத் […]
உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வபோது டிவிட்டரில் தனது அரசியல் கருத்துகளையும், அரசின் மீதான விமர்சனங்களையும் தெரிவித்தது வருகிறார். இதனால் அரசியல்வாதிகளும் அவரின் டிவிட்டுக்கு அவ்வபோது பதில் கருத்துகளையும் கூறிவந்தனர். இந்நிலையில் கமலஹாசன் வீட்டை இந்து பாதுகாப்பு கட்சியினர் முற்றுகையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவரது வீட்டிற்கு தற்போது போலிஸ் பாதுகாப்பு போட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. source : dinasuvadu.com
சென்னை மாநகராட்சியின் புதிய விரிவுபடுத்தப்பட்ட எல்லையை கொண்ட சென்னை மாநகராட்சியை முதல்வர் எடப்பாடி K.பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். மேலும் இதன் வரைபட எல்லை அடங்கிய வலைதள முகவரியையும் அறிமுகபடுத்தினார். இந்த புதிய விருவுபடுத்தபட்ட எல்லையில் 3 வருவாய் கோட்டங்கள் 16 வட்டங்களை இணைத்து சென்னை மாநகராட்சி விரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் புதிய நிலஅளவை வரைபடங்களை eservices.tn.gov.in இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். source : dinasuvadu.com
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த 3 அறைகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்திற்கு பிற்பகலில் 12.30 நிமிடத்திற்கு வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வந்தது.வருமான வரித்துறை அதிகாரிகள் வந்ததை அடுத்து அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனையின் போது சசிகலா, பூங்குன்றன் ஆகியோரின் அறைகளில் சோதனை நடந்தது.மேலும் 3 […]
பல்லாவரத்தில் வடமாநில இளைஞர் கும்பல் ஆயுதங்களை காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்..இதில் சுமார் 20 பேர் அடங்கிய குழுவில் 11 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர். சென்னை பல்லாவரத்தில் வடமாநில இளைஞர் குமபல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்டோர் இந்த துணிகர செயலில் ஈடுபட்ட நிலையில்,11 பேர் சிக்கியுள்ளனர்.சென்னை பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கத்திற்கு செல்லும் சாலையில் உள்ள இரும்பு கிடங்கிற்கு பழைய இரும்பு பொருட்களை வாங்க பாபு என்பவர் தனது […]
மறைந்த முன்னால் முதல்வர் வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தீவிரமாக நடைபெற்றும் வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறிதது அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு […]