பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களை மிக கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கும் தமிழக அரசு. தற்போது 300 மாநகர பேருந்துகளை குறுகிய தூர வழிதடங்களாக மாற்றி மறைமுக வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இதுவரை இயங்கி வந்த 300 நெடுந்தூர போக்குவரத்து சேவைகளை நிறுத்தி குறைந்த தூர வழித்தடமாக அரசு போக்குவரத்து கழகம் மாற்றியிருக்கிறது. இதுவரை ஒரே பேருந்தில் சென்று வந்த இடங்களுக்கு தற்போது 2 அல்லது 3 பேருந்துகளை பிடித்து செல்லவேண்டிய […]
நேருபூங்காவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மெட்ரோ ரயில் வேலைகள் நடந்து வருகின்றது. சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் தொடர்ந்து நடக்கும். சோதனை ஓட்டம் முடிந்த பிறகு விரைவில் மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில், சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ சேவை அடுத்த மாத இருதியில் தொடங்கவுள்ளது.
சென்னை முழுவதும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர். மேலும் இந்த கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது.மொரீசியஸ், கோலாலம்பூர், கொச்சி விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
சென்னை அருகே சீட் பெல்ட் அணியாததால் காா் ஓட்டுநரை போக்குவரத்து காவலா்கள் கண்டித்ததால் மன உளைச்சலடைந்த ஓட்டுநா் தீக்குளித்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பழைய மகாபல்லிபுரம் அருகே தனியாா் காா் ஓட்டுநரான மணிகண்டன் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலா்கள் காரை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாமல் வந்தது தெரியவந்துள்ளது. இதனை போக்குவரத்து அதிகாரிகள் விசாரிக்க, இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. […]
சென்னை விமான நிலைய கூடுதல் வசதிக்காக 151 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்துள்ளனர்.கோலப்பக்கம், மணப்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் கௌல் பஜார் ஆகியவற்றில் நிலம் கையகப்படுத்தப்படும்.இந்த இடங்களில், இரண்டாம் ஓடுபாதைக்கான எளிய அணுகுமுறை, லைட்டிங் அமைப்புகளை நிறுவுதல், விமான நிலையங்களுக்கான கட்டுமானம் மற்றும் எரிபொருள் பண்ணை போன்றவை அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.இதை குறித்து பேசிய விமான அதிகாரி ஒருவர்,”நாங்கள் நீண்ட காலமாக மாநில அரசாங்கத்தை கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு சில மாதங்களில் நிலத்தை பெற நாங்கள் நம்புகிறோம். நில கையகப்படுத்துதல் பின்னர் செயல்முறை தொடங்கும். பயணிகள் […]
சென்னை ஆவடி அருகே தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 41 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்து, மக்களை தரம் தாழ்த்திவிட்டதாக, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி வேதனை தெரிவித்துள்ளார். இதில் கோபால்சாமி கலந்து கொண்டு, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வாக்குக்கு பணம் எங்கே என்று கேட்டு வாங்குபவர்கள் இருப்பதாக கூறினார். தேர்தலில் பண பலத்தை ஒடுக்க, […]
சென்னை விமான நிலையத்தில் வரும் 30ம் தேதி வரை பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 30ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
தொலைதூரக்கல்வி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்கள் (A15, C16, A16, C17, A17 அணியினர் மற்றும் அதைத்தொடர்ந்த அணியினர்) தங்களின் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு டியூஷன் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in, : www.unom.ac.inஎன்ற இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். source: dinasuvadu.com
சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய , அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், பண்டிகை காலங்களில் இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீண்டும் திரும்பி வரும் போது இருக்கைகள் நிரம்பாமல் வருவதாகவும், அதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார். சாதாரண நாட்களில் வழக்கமான கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்குவதாகவும், இதுவரை அரசு கட்டணம் நிர்ணயிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் அதிக கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை […]
காற்றின் தரம் குறித்து சென்னையின் 15 இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தியாகராயநகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு தென் சென்னையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 மணிநேரம் வரை புகைமூட்டம் நீடிக்கும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று அதிகாலையில் போகி பண்டிகையையொட்டி சென்னையில் விமானங்கள் ரத்தானது .அதேபோல் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளனார்கள் […]
போகி பண்டிகையையொட்டி சென்னையில் பொதுமக்கள் அதிகாலையளவில் அதிக அளவிலான பழைய பொருட்களை எரித்ததால் விமான நிலையத்தின் ஓடுபாதை முழுவதும் புகைமண்டலமாக சூழ்ந்துள்ளது. இதனால்,சென்னை விமானநிலையத்தில் 12 விமானங்கள் தரையிரங்க முடியாமல் பெங்களூரு உள்ளிட்ட 4 இடங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன.மேலும் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் விழாவின் தொடக்கமான போகி பண்டிகையையொட்டி, அதிகாலையிலேயே எழுந்து மக்கள் தங்கள் வீட்டில்உள்ள பழைய பொருட்களை கொளுத்தி கொண்டாடி வருகின்றனர். இதனால் சென்னையில் பனியோடு புகைசூழ்ந்து காணப்படுகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்வதுகூட தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளது
சென்னையில் பொதுமக்களை நாய் வண்டியில் ஏற்றி சென்ற விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையீடு செய்தார். இந்நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது,அதன் விசாரணையில் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் பத்திரிகை செய்தி அடிப்படையின் பேரில் இதுபோன்ற முறையீடுகளால் நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள் என தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் பல இடங்களில் பேருந்து ஓட வில்லை. இதனால் பெரிதான அளவில் பாதிக்க படும் மக்கள் நாய் வண்டியில் ஏறி செல்கின்றது அதிர்ச்சியை தருகிறது.பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து பயணிகள் கோயம்பேட்டிற்கு நாய் வண்டி என்று கூட பார்க்கலாம் கட்டணம் கட்டி செல்கிறார்கள். இதன் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
கோவையில் மேட்ரிமோனியல் இனையதளம் மூலம் பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண், பெண்ணின் தாயார் உட்பட 3 பேரை கைது செய்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பாலமுருகன் (27). இவருக்கு சுருதி என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. 3 மாதம் பழகியவுடன் பாலமுருகனிடம் திருமணம் செய்துக்கொள்வதாக சுருதி கூறியுள்ளார். இந்நிலையில், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தவணை முறையில் ரூ.45 லட்சம் பெற்றுள்ளார். பாலமுருகனும் […]
வரும் ஜனவரி 15 ஆம் தேதியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு , அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டும் .அதேபோல் இறைச்சிகளை பதப்படுத்தி விற்கவும் தடை பிறப்பித்துள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் .
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1 ஆம் தேதிக்குள் அறிவிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்நிலையில் அந்த நோட்டிஸிக்கு பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் மத்தய சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேடு உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 11, 12, 13 ஆகிய தேதிகளில் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் 29 சிறப்புக் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு முன்பதிவு நேற்று முன் தினம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் 8-வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில், தற்போது வரை முன்பதிவுகள் நடைபெறாததால் சிறப்புக் கவுண்டர்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. […]
பயணிகள் மற்றும் சாமான்களை கொண்டு செல்லும் ஒரு சுரங்கப்பாதை அமைக்க சென்னை விமான நிலையம் முடிவு செய்துள்ளது. விரைவில் பயணிகளின் போக்குவரத்தை சரி செய்ய இது அமைக்கப்படுகின்றது. மேலும் இதற்காக, சென்னை விமான நிலையத்தின் மெட்ரோ ரெயில் புதர் பகுதியில் எப்படி குடைவுகளை மேற்கொள்ள முடியும் என்பதை அறிய முயற்சிகள் நடந்து கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தின் செலவு சுமார் ரூ.700 கோடியை எட்டும். இதை பற்றி பேசிய விமான நிலைய அதிகாரி, இந்த சுரங்கப்பாதை 10.5 அடி ஆழத்தில் இருக்கும். மெயின் டெர்மினல்களில் இருந்து […]
சென்னை வியாசர்பாடி திடீர் நகரில் 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு 4 ரவுடிகள் தப்பியோடியுள்ளனர். கணவன் கழுத்தில் கத்தியை வைத்து மனைவி மற்றும் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த 4 ரவுடிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.