சென்னை மாநகரில் மாநகராட்சிக்குட்பட்ட உத்தண்டி கடற்கரைக்கு அருகே உள்ள பகுதிகளில் அரசின் விதிமுறைகளை மீறி பங்களா கட்டியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விதி முறை மீறல்கள் குறித்து விளக்கமளிக்கவும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆளுநர், முதல்வர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் துரைசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அரசியல்,அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லும் பொது 10 நிமிடம் வரை போக்குவரத்து நிறுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
126 ஆண்டு பாரம்பரியமிக்கது சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதா..? தடுத்திடும் வகையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம். இந்தியாவின் தொன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழக்கூடிய தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை தமிழக அரசு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் தனது ஆதரவு தெரிவித்தது. மாணவர்களின் நலன் கருதி சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யும் முயற்சியை […]
இனி புதிதாக திருமணம் ஆகும் புதுமண தம்பதிகள் திருமண பதிவு அலுவலகத்தில் பதிந்து திருமண சான்று பெற மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்றிதழை கட்டாயமாக்க கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற மத்திய அரசு சார்பாக நடைபெற்ற விழாவில் வாழ்த்து பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதில் சமஸ்கிருத பாடலான ‘ மகா கணபதி ‘ வாழ்த்து பாடல் ஒலிப்பரப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த வாரம் எரிசாராயம் வீசப்பட்ட தனியார் ரத்த பரிசோதனை மைய பெண் ஊழியர் யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் யமுனா மீது எரிசாராயம் வீசியதாக ரத்த பரிசோதனை மைய உரிமையாளர் ராஜா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சம்பா சாகுபடி பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தொடர்ந்து 4வது நாளாக கடலூர் மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனம் முன்னிலையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்காமல் காப்பீடு நிறுவனம் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. விவசாயிகள் காப்பீட்டு தொகையை […]
செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் சென்னையில் தொடர் கதையாக நடந்து வருகிறது. தினமும் சராசரியாக 5-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகை பறிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செயின் பறிப்பு நடைபெறுவதும், குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்த வகை குற்றங்கள் முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை. இதனால், சாலையில் நடந்து செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர். தனியாக செல்லும் பெண்களின் செயின் பறிக்கும் நிலை மாறி தற்போது கணவருடன் செல்லும்போது, […]
சென்னையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி ஐஃஎப்எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். பெரியமேடு பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவர் புரசைவாக்கத்தில் துணிக்கடை வைத்துள்ளார். இவரிடம் கோகுலகிருஷ்ண ஹரி என்பவர், தன்னை ஒரு ஐஎப்எஸ் அதிகாரி என்றும், பலருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய இம்ரான் தனது மைத்துனரின் வெளிநாட்டு வேலைக்காக 2 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய ஹரி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் […]
ஒரே இடத்தில் சென்னை அருகே சிக்கிய 74 ரவுடிகள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மலையம்பாக்கம் பகுதியில் ரவுடியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 75 ரவுடிகளை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்கள் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பின் சென்னையில் உள்ள தொடர்புடைய பல்வேறு காவல் நிலையங்களுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் மீது உள்ள பழைய குற்ற வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து ரவுடிகளில் 71 பேர் […]
75 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள் சென்னையில் உள்ள பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாகத் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரோலக்ஸ், பர்பெரி, ராடோ, சிட்டிசன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி கைக்கடிகாரங்கள் சென்னையில் விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன் தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவர்கள் சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள […]
சென்னை கொளத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றை கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொளத்தூரில் உள்ள நகைகக்கடையில் மூன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட நாதுராம் மற்றும் கூட்டாளிகள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட நிலையில் 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் எங்கு நகைகளை விற்றார்கள் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர். இந்த […]
ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் சென்னை மின்சார ரெயிலில் பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் சென்று ரகளையில் ஈடுபடும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடும் ரெயிலில் பட்டாக்கத்திகளை உரசிக்கொண்டு சென்ற 9 மாணவர்கள் ஆயுத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வருங்காலத்தில் பாஸ்போர்ட், மற்றும் காவல்துறையின் நன்னடத்தை சான்று வழங்கப்படாது என்று காவல்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கெத்து காட்டுவதாக நினைத்து பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் […]
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவடி உட்பட நாட்டின் 5 ராணுவ சீருடை தொழிற்சாலைகளை மூடக்கூடாது என்று கூறியுள்ளார். சீருடைகளுக்கு பதில் சீருடைப்படி வழங்கும் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அடுத்து இந்த தொழிற்சாலைகள் ஏப்ரலுடன் மூடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆவடியில் 2 ஆயிரத்து 321 பேர் உட்பட 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளார். ராணுவ சீருடைகளின் சிறப்பே மிடுக்கு என்று தெரிவித்துள்ள அவர், ஒரே மாதிரி சீருடையில் பயிற்சி மற்றும் […]
கடந்த மாதத்தை விட இந்த மாதம் காய்கறிகளின் விலை பாதிக்குமேல் சரிந்து காணபடுகிறது. இதற்க்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் லாரிகளும் அதிகமாக வர ஆரம்பித்து விட்டன. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கடந்த மாதம் கிலோ ரூ.120 ஆக உயர்ந்து இருந்த சின்ன வெங்காயம் தற்போது 30 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்க்கபடுகிறது. கேரட் மற்றும் பீன்ஸ் ஆகியவை ரூ.15 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் தக்காளி ரூ.8 ஆகவும் விற்பனையாகிறது. […]
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ராணுவத்திற்கான ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை 56 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2,200 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இந்த ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இங்கு வேலை செய்யும் சுமார் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. source : dinasuvadu.com
தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் 1320 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா சென்னை கலைவானர் அரங்கில் நடைபெறகிறது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் பாரத மிகு மின் நிலையத்துக்கும், தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலில் உடன்குடி மின் திட்டத்துக்கு அடிக்கல் முதலமைச்சர் பழனிசாமி நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியை […]
சென்னை உள்நாட்டு விமானநிலையத்தின் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் உள்ள 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து குதித்து விஜயவாடாவைச் சேர்ந்த சைத்தன்யா (30) என்ற நபர் தற்கொலை செய்து கொண்டார். இவர் குதித்தது 4வது நுழைவாயிலில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்தார். மேலும் அவரது தற்கொலை குறித்து சென்னை விமான நிலைய போலீசார் தீரவமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அவதிப்படும் வேளையில், பலருக்கு மிதிவண்டி பக்கம் கவனம் திரும்பியுள்ளது. ஆகவே யாருக்கும் கவலை வேண்டாம்.. சென்னையில் மிதிவண்டி பயணத்திற்கு இலவசமாக வாய்ப்பளித்துள்ளது மெட்ரோ ரயில் நிறுவனம்.. அசோக் நகர், வடபழனி, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், நேரு பூங்கா ஆகிய 6 நிலையங்களில் இருந்து மிதிவண்டிகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்பணமோ அல்லது கட்டத்தேவையில்லை என்று என அந்நிறுவனம் […]
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கல்லீரல் நோய் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட முதல்வர் பேசுகையில், “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்றது மிகவும் பெருமையளிக்கக் கூடியது. இங்கு தரமான சுகாதார சேவை வழங்கப்படுகிறது. சுகாதாரத்துறை நிர்ணயித்த இலக்குகளை, வெகு சீக்கிரமே அடைந்துவிட்டோம். உடலுறுப்பு தானத்திற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கி, எளிதில் பதிவு செய்து கொள்ளும் முறையை கொண்டு […]