ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பித்துரை ஆகியோர் பார்த்ததாகவும், அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவைப் பார்த்து அவர் கையசைத்ததாகவும் விசாரணை ஆணையத்தில் சசிகலா வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்டோரிடம் நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தி உள்ளார். அவர்களில், பெரும்பாலானோர் சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 21ம் தேதி நீதிபதி […]
சென்னை கிரவுன் பிளாசா என்ற நட்சத்திர ஹோட்டல் சுமார் 24 கோடியே 88 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து வரி கட்டவில்லை என கூறி சீல் வைக்க வந்த அதிகாரிகள், நிர்வாகம் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ளது கிரவுன் பிளாஸா ஹோட்டல். பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஒட்டலுக்கு பல ஆண்டுகளாக சொத்துவரி கட்டப்படவில்லை என்றும், மாநகராட்சி […]
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன்,திருமாவளவன்,சீமான்,திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,சாலை மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற முஸ்லிம் அமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் அருகே […]
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மாணவர்கள் சங்கம் சார்பாக, கல்வி கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அருகே மாபெரும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.
உணவு தானிய உற்பத்தியில் தமிழக அரசு சாதனை : “கிருஷி கர்மான் ” விருது பெற்றது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமியிடம் “கிருஷி கர்மான் ” விருதினை அமைச்சர் துரைக்கண்ணு காண்பித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்பென்சர் அருகே தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் பயிர்காப்பீட்டினை உடனே வழங்கக் கோரி நியூ இந்தியா இன்சூரன்ஸை முற்றுகை மாநிலத் தலைவர் O.A நாராயணசாமி, இயக்குனர் கெளதமன் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே அயப்பாக்கத்தில் தனியார் புக் ஸ்டால் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.40 லட்சம், 85 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஆவடி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை சர்வேதச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோடைக்காலம் தொடங்கியதையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் சென்னை மெரினா காந்தி சிலை அருகில் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் வழங்கினார்.
சென்னை : சிறப்பாக பணியாற்றிய 298 தலைமை காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. நடைபெற்ற இவ்விழாவில் காவல் ஆணையர் பங்கேற்றனர். காவல் பணி என்பது கடினமானது, மக்களுக்கு சேவையாற்றும் பணியை காவலர்கள் செய்து வருகின்றனர். சவாலான காலத்திலும் பெண் காவலர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர் என்றார் காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் (Chennai Metropolitan Development Authority, CMDA Chennai-சிஎம்டிஏ)யின் எல்லை விரிவாக்க அரசாணைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில் விசாரணை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் சீமான், வேல்முருகன், திருமுருகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நாம் தமிழர்,தமிழக வாழ்வுரிமை கட்சி,விசிக,முஸ்லிம் மக்கள் முன்னேற்ற கழகம்,மே 17 இயக்கம்,பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளின் தொண்டர்கள் ஏராளமானோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சென்னை : தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் குமரி, தூத்துக்குடி, நாகை மற்றும் கடலூரை சேர்ந்த 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல் ஒக்கி புயலால் மாயமான 177 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
சுபிக்ஷா ஒரு இந்திய சில்லறை சங்கிலிப் பொருள்களை விற்கும் ஒரு பல்பொருள் அங்காடி ஆகும், இது 1600 கடைகள், மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், மருந்துகள் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றை இந்த நிறுவனம் விற்பனை செய்தது. இது 1997 ஆம் ஆண்டு ஆர் சுப்பிரமணியன் என்ற சென்னைகாரரால் இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. பின்னர் 2009 ஆம் ஆண்டில் நிதி மோசடி மற்றும் கடுமையான பண நெருக்கடி காரணமாக மூடப்பட்டது. பின்பு இந்த நிறுவனத்தின் மீது ரூ.750 கோடி வங்கி […]
உரிய நுழைவு அனுமதிசீட்டு பெற்றுத்தான் குரங்கணி வனப்பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றோம். மலைப்பகுதி விவசாயிகள் வேளாண் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை கீழே இறங்கும்போதுதான் புற்களுக்கு தீ வைத்துள்ளனர்.வழக்கத்தை விட காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. குரங்கணி வனப்பகுதிக்கு சென்றபோது அங்கு காட்டுத்தீக்கான அறிகுறி இல்லை.மேலும் அனுபவம் மிக்க வலிக்காட்டிகள், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் உடன் சென்றனர். குரங்கணியில் இருந்து, கொழுக்குமலைக்கு வழக்கமாக செல்லும் பாதையில் தான் ட்ரெக்கிங் சென்றோம்..குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து சென்னை […]
சென்னை தாம்பரம் அருகில் ஹஸ்தினாபுரம் மற்றும் சேலையூரின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு சிட்லபாக்கத்தில் நேற்று புது அஞ்சலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தென் சென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தமிழ்நாடு அஞ்சலகத்துறை இயக்குனர் உயர்திரு.எம்.சம்பத் IPoS, சென்னை மாநகர அஞ்சலகத்துறை இயக்குனர் உயர்திரு.ஆர்.ஆனந்த் IPoS ஆகியோர் பங்கெடுத்தனர். இதன் முதற்கட்டமாக அரசு பள்ளியில் பயிலக்கூடிய 182 பெண் குழந்தைகளுக்கான SSA கணக்கானது (Account) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன் பங்களிப்பின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சலகத்தின் பின் கொடு நம்பர் […]
சென்னையில் மருத்துவமனைக்கு செல்லும்போது ஆட்டோவில் தவறவிட்ட 15 ஆயிரம் பணம் மற்றும் அடையாள அட்டை, ஆவணங்களை உரிய வெளிமாநில பெண் பயணியிடம் சென்னை சாமியார் தோட்டம் பகுதி ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜ் காவல்துறை மூலம் ஒப்படைத்தார். ஏற்கனவே கோயம்புத்தூரில் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவி அஸ்வினியை அவரது முன்னாள் காதலர் அழகேசன் கொலை செய்தார். தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் தரப்பில் இருந்து ஒரு நபர் மட்டும் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தனிடம் எப்படி இப்படி நடக்கலாம், போலீஸ் என்ன செய்கிறது, பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார். அந்த நபரின் […]
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழாவில், திருமதி.பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி, சிறப்புரையாற்றினார்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள தியாகராய அரங்கில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் ஜெயக்குமார் ,சரோஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள்,பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.