ராணுவத் தளவாடக் கண்காட்சி சென்னை அருகே மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராணுவ கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீத்தாராமன், இணையமைச்சர் சுபாஷ்பாம்ரே, இந்திய ராணுவ தளபதி பிபின்ராவத், கடற்படை தளபதி சுனில் லம்பா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். நாளை நடைபெறும் அதிகாரப்பூர்வ துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். தமிழகத்தில் முதன்முறையாக நடத்தப்பட உள்ள இக்கண்காட்சியில் அமெரிக்கா, கனடா, […]
கருணாஸ்-ன் முக்குலத்தோர் புலிப்படையை சார்ந்தவர்கள் சி.எஸ்.கே ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு முன் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் டிக்கெட்களை எரித்து […]
சென்னை உயர் நீதிமன்றம் , உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கிய காளி படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. காளி திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆன்டனி மனைவி பாத்திமா, ஏற்கனவே அண்ணாதுரை என்ற படத்தை தயாரித்திருப்பதாகவும், அதனை வெளியிட்டதில் தமக்கு 5 கோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்சாண்டர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இழப்பு தொகையைத் தராமல் காளி படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். […]
சென்னை உயர்நீதிமன்றத்தில்,உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவோரது உடல்தகுதி பற்றிய விவரங்கள் வேட்பு மனுவில் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், இதனால் தேவையற்ற இடைத்தேர்தல்களைச் சந்திக்க நேரிடுவதாகவும் பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்த சுப்பையா என்பவர் முறையிட்டிருந்தார். இதனால், வேட்பாளர்களின் உடல் தகுதி பற்றிய மருத்துவ அறிக்கையை வேட்புமனுவுடன் இணைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டிருந்தார். […]
மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் நேற்று எதிர்கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சிம்சன் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊர்வலமாகச் சென்ற அவர்கள் மெரினா கடற்கரைச் சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று மாலையே விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் அனுமதியின்றி […]
சென்னை கமிஷ்னர் அலுவலகம் அருகே அரசு பேருந்து கண்ணாடியை மர்ம ஆட்கள் கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. இதேபோல் அண்ணா நகர், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. 5 அரசு பேருந்துகளும் ஒரு தனியார் பேருந்தும் தாக்குதலுக்குள்ளாயின. இந்தத் தாக்குதல்களில் ஓட்டுநர் ஒருவரும் நடத்துநர் ஒருவரும் காயமடைந்தனர். இதையடுத்துப் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் காவல்துறையினர் பாதுகாப்புடன் மறைமறையடிகள் சாலையில் உள்ள பணிமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன. […]
சென்னையில் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர் உட்பட 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு […]
சென்னை முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலை மறியலை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடியுடன் மெரினாவில் உள்ள அண்ணாநினைவிடம் நோக்கி பேரணியாகச் செல்கின்றனர். இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, […]
சாலை மறியலை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடியுடன் மெரினாவில் உள்ள அண்ணாநினைவிடம் நோக்கி பேரணியாகச் செல்கின்றனர். இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு […]
சென்னை அண்ணா சாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமர்ந்து மறியல் போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அண்ணா சமாதி நோக்கி பேரணி மேற்கொண்டுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு […]
அமலாக்கதுறை 1000 கோடி ரூபாய் மோசடி செய்த சுபிக்ஷா சூப்பர் மார்கெட்டின் உரிமையாளர் சுப்ரமணியனின் 4.92 கோடி ரூபாய் சொத்தை முடக்கியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட், சுப்ரமணியன் என்பவரால் தொடங்கப்பட்டது. 1600 கிளைகள் கொண்டிருந்த சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் பெயரில், நாடு முழுவதும் மேலும் 2000க்கும் மேற்பட்ட கிளைகள் தொடங்கப் போவதாகக் கூறி 13 வங்கிகளில் 890 கோடி ரூபாய் வரை அவர் கடன் பெற்றுள்ளார். மேலும் தொழில் தொடங்க பங்குதாரராக சேர்ப்பதாகக் கூறி […]
காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உண்ணாவிரதம் போராட்டம். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜெ.அன்பழகன் மற்றும் திமுகவினர் உண்ணாவிரதம் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உயர்நீதிமன்றம் பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட், 2 ஆயிரத்து 800 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் முதல் தவணையாக, 15 விழுக்காடு தொகையான 420 கோடி ரூபாயை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-17 நிதியாண்டில் வருமானத்தை குறைத்து காட்டிய புகாரில் அந்நிறுவனத்தின் 68 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து காக்னிசன்ட் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், சிடிஎஸ் நிறுவனத்தின் முடக்கப்பட்ட ஒரு வங்கி கணக்கை […]
சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சி புறப்பட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். திருச்சி பொன்மலை பகுதியில் மக்கள் நீதி மய்ய மாநாடு நாளை நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சி புறப்பட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். இந்த பயணத்தின் போது கமல்ஹாசன் ஆங்காங்கே மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அதற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதையடுத்து ரெயில் நிலையங்களில் சந்திக்கும் திட்டத்தை கமல் ரத்து செய்தார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள வீடியோ […]
காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் திமுக 3 ஆவது நாளாக மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரங்கநாதன் சுரங்கப்பாதை, மதுராந்தகம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு போராட்டம் என்று திமுகவினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து,போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மே 17 இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரெயில் மறியல், சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான […]
ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தை தடுக்க குவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கெடுபிடிகளைத் தளர்த்திப் பொதுமக்கள் கடற்கரைக்கு நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்துச் சென்னைப் பட்டினப்பாக்கம் கடற்கரையில் நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஞாயிறு அன்றும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் எனக் கருதி அதைத் தடுப்பதற்காகக் கடற்கரை முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைச் சாலையில் இருந்து கடற்கரைக்கு எந்த வாகனமும் செல்ல முடியாத […]
சென்னை மெரினா கடற்கரையில் இன்று பொதுமக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் காரணமாக, அனுமதிக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 500-க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை உள் சாலையில் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ஆலிப் ரெசிடென்ஸி ஓட்டலில் 4வது நாளாக வருமானவரி சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழிலதிபர் நாசருக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை 4வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள செங்குன்றம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவி சர்மிளா பொதுத்தேர்வு நன்றாக எழுதாததால் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை. கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவி எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.