இந்தியன் வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கபட்டது . சென்னை அடையார் பகுதியில் அமைத்துள்ள இந்தியன் வங்கியின் உள்ளே முகமுடியுடன் நுழைந்த மர்ம நபர், பணம் செலுத்தும் இடத்திற்கு சென்று, அங்கே வரிசையில் நின்ற ஒருவரிடம், தன் கையில் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினார். வங்கியில் பணம் செலுத்த நின்றவரின் கையில் இருந்த 6 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினார். உடனடியாக வங்கியில் இருந்த பொதுமக்களும், வங்கி பாதுகாப்பில் இருந்த பாதுகாவலரும் அந்த திருடனை […]
மூன்றரை வயது சிறுமிக்கு, சென்னையில் கோவிலில் வைத்து பாலியல் தொந்தரவு அளித்த பூசாரியை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர். சென்னை சூளைமேட்டில் வசிக்கும் மூன்றரை வயது சிறுமி கண்ணகி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கோவில் பூசாரியான உதயகுமார் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மிரண்டு போன குழந்தை வீட்டுக்கு வந்து அழுதுள்ளது. பெற்றோர் விசாரித்த போது கோவில் […]
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் கலந்து கொண்டார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சீராய்வு மனு தொடர்பாகவும், காவிரி வழக்கில் மத்திய அரசுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் […]
காவல்துறையினர் , சென்னை மயிலாப்பூரில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தனர். நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக வெளியிட்டிருந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பதிவு ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]
சென்னை காவல் துறை ஆணையரிடம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் புகார் மனு அளித்தனர். எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக இழிவான பதிவைப் பகிர்ந்திருந்தார். இது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த பத்திரிகையாளர்கள் எஸ்.வி.சேகர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட கட்சியினர் அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா நியமனத்தை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டநிலையில் கைது செய்யப்பட்டனர். சென்னை சைதாப்பேட்டை பானகல் மாளிகை அருகே திரண்ட தேமுதிகவினர், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காரில் அமர்ந்தபடியே முழக்கம் எழுப்பினார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா காருக்கு வெளியே நின்று முழக்கம் எழுப்பினார். அப்போது தொண்டர்கள் முண்டி அடித்ததால், அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி அவர்களை விரட்டி அடித்தார். […]
தனியாக வாழும் மூதாட்டி வீட்டில் பூட்டை, சென்னை அபிராமபுரத்தில் உடைத்து 32சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அபிராமபுரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜானகி என்கிற 75 வயதுப் பெண் தனியாகக் குடியிருந்து வருகிறார். 2 நாட்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்ற இவர், இன்று திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 32சவரன் நகைகள், ஐம்பதாயிரம் ரூபாய் பணம் ஆகியவை […]
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் ,நிர்மலா தேவி விவகாரம் குறித்து நாளை அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த வழக்கு குறித்து விசாரிக்க ஆளுநரால் நியமிக்கப்பட்டவர் இவர். விசாரணையை தொடங்குவதற்காக இன்று, மதுரை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இன்று மாலை அருப்புக் கோட்டை செல்ல உள்ளதாக சந்தானம் கூறியுள்ளார்.மேலும் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 நாள் விசாரணை […]
திமுகவினர் கருணாநிதி குறித்து அநாகரிக ட்வீட் போட்ட ஹெச்.ராஜாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவர் கருணாநிதி அவரது துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். ஹெச்.ராஜாவின் இந்த டிவிட் திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எச் ராஜாவை கண்டித்து திமுக மகளிரணியினர் சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹெச்.ராஜாவின் கொடும்பாவியை எரித்தும் அவரது படத்தை காலணியால் […]
பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் சென்னை மாநகராட்சி இடையே பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. நகர வளர்ச்சி, நகர்ப்புற சவால்கள், பொருளாதார மேம்பாடு, சீர்மிகு நகரங்கள், அவசர காலங்களின்போது எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களில் இணைந்து செயல்படுவது தொடர்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்தியாவுக்கான பெல்ஜியம் தூதர் ஜேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை காவல் உதவி ஆணையர் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிக்கிய நிலையில் அவர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளதால் பணியிடை நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13 ஆம் தேதி இரவு மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் திருமங்கலம் உதவி ஆணையர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது உதவி ஆணையர் கமீல் பாஷா மேஜை லாக்கரில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 500 […]
மகளிர் தங்கும் விடுதி சென்னையில் நடத்திவந்த வயதான கணவன் – மனைவி, கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொட்டிவாக்கத்தில், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பணிக்குச் செல்லும் மகளிருக்கான தங்கும் விடுதி செயல்படுகிறது. இதன் உரிமையாளரான மாயாண்டி என்ற முதியவரும், அவரது மனைவி வள்ளிநாயகியும் அங்கு 3-ஆம் தளத்தில் வசித்தனர். இவர்களது மகள் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில், மகன் ஸ்ரீஹரீஷ் மேடவாக்கத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி […]
சென்னை உயர்நீதிமன்றத்தில்,மீன் பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நிவாரணம் வழங்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுவதாகவும், இது நாளொன்றுக்கு 82 ரூபாய் மட்டுமே என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடும்பத் தேவைகளுக்கு போதாது என்றும் கூறப்பட்டுள்ளது. வெவ்வேறு மீன் இனங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்வதாகவும், மீன்பிடி தடைக்காலத்தில் மீன் வளம் அதிகரிக்கும் என்பதற்கு […]
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ , நாடு முழுவதும் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பூ, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
லஞ்ச ஒழிப்பு போலீசார், சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் கமீல் பாட்ஷா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமங்கலத்தில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையின் போது கணக்கில் வராத 5 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் எங்கிருந்து, எப்படி கிடைத்தது என்பதற்கான விளக்க கடிதம், உதவி ஆணையர் கமீல் பாட்ஷாவிடம் இருந்து பெறப்பட்டது. அதில் பணம் எப்படி வந்தது என்பது தமக்கு நினைவில் […]
போலீசாரின் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை சென்னை தியாகராயர் நகரில் உடைத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் எதிரே மாம்பலம் போலீசார் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது சில நபர்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பியோடிவிட்டனர். மாம்பலம் காவல் நிலையம் அருகில் இருந்தும் தப்பியோடிய நபர்களை அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கண்டறிந்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த கார்த்திக் […]
திருவள்ளூரில் சென்னையைச் சேர்ந்த பிரபல கூலிப்படைத்தலைவன் பாம் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டார் புளியந்தோப்பு, வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன். பிரபல ரவுடி தென்னரசுவின் சகோதரர். இவரது தம்பி தென்னரசு கடந்த 2015-ம் ஆண்டு தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே கொலை செய்யப்பட்டார். சென்னையைக் கலக்கிய பிரபல தாதா காது குத்து ரவி, குன்றத்தூர் வைரம், காக்கு வீரன் போன்றோரின் நெருங்கிய கூட்டாளி. கொலை மற்றும் கொலை முயற்சிகளின் போது பாம் (வெடிகுண்டு) வீசுவதில் கைதேர்ந்தவர் என்பதால் […]
நான்காவது நாளாக , சென்னை துறைமுகத்துக்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகளின் வேலை நிறுத்தம் நீடித்து வருகிறது. வாடகை உயர்வு உள்ளிட்ட கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் மூன்றம்ச கோரிக்கைகள் சில மாற்றங்களுடன் CFS நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத காலமாகியும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி அவர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது நாளாக நீடிக்கும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் […]
வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகிறார்கள்.வண்டலூர் பூங்கா நிர்வாகம் பூங்கா நிர்வாகம் ஆன்-லைன் மூலம் Live Str-e-a-m-i-ng என்னும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்-லைன் மூலம் காணமுடியும் ஓரிரு நாட்களில் யானை, […]