சென்னையை அடுத்த கானத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹரீஸ். பல் டாக்டரான இவர், சோழிங்கநல்லூர் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 2–ந் தேதி டாக்டர் ஹரீசின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம ஆசாமி ஒருவர், ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார். பணத்தை தராவிட்டால் கொலை செய்துவிடுவதாக கூறி ரூ.50 ஆயிரம் வரை பேரம் பேசுகிறார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி டாக்டர் ஹரீஸ் கானத்தூர் போலீசில் […]
சென்னை தலைமைச் செயலகத்துக்கு தமிழ்நாடு போக்குவரத்துக்கழகத்தின் (கோவை) ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்து நேற்று கொண்டு வரப்பட்டிருந்தது. அவற்றின் கட்டுமானம் மற்றும் நவீன வசதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அவருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் உடனிருந்தனர். பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி வருமாறு:- 2 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க அரசு ஆணையிட்டு இருந்தது. அதன்படி, புதிய கூண்டுகள் கட்டி தயாராக உள்ள முதல் சிற்றுந்து […]
சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தில் மதுரை, திருச்சி பயணிகள் தகராறு மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானம் ஒரு நாள் காலதாமதமாக வந்ததால் தகராறு
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில்,பார்வையாளர்கள் மற்றும் புகார் அளிக்க வருவோரின் நலன் கருதி, கணினி முறையில் அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. வளாக மேலாண்மை முறை என்ற இத்திட்டத்தை, சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதன்மூலம், புகார் அளிக்க வருவோர் மற்றும் பார்வையாளர்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, புகைப்படம் மற்றும் Q.R.Code உடன் அனுமதிச்சீட்டு விரைவாக வழங்கப்படும். Version X innovaton என்ற தனியார் நிறுவனம், […]
சென்னை விமான நிலையத்தில் ,போர்ச்சுகல் நாட்டில் இருந்து யூ.பி.எஸ்.சில் மறைத்து வைத்து கடத்தி எடுத்து வரப்பட்ட 3 கிலோ கொகைய்ன் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொண்டு வந்த கணினி யூ.பி.எஸ்.சை அகற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தாமிரக் கம்பி சுற்றுகளுக்கு இடையே மறைத்து […]
சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே 29 ஆம் தேதி கட்சிகளின் கொடியின்றி போராட்டம் நடத்தப்படும் காவிரி வாரியம், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்த உள்ளதாக வேல்முருகன் அறிவித்துள்ளார். வரும் 29 ம் தேதி உழைப்பாளர் சிலை அருகே போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டோம்; காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். எந்த அரசியல் சாயம், கொடிகள் இல்லாமல் மெரினாவில் ஒன்றுக் கூடுவோம். அறவழி போராட்டமாகவே நடத்த திட்டமிட்டுள்ளோம் […]
சென்னையை அடுத்த சேலையூர், எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 33). இவர் ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இவரது செல்போனுக்கு தொடர்புகொண்ட சாமி என்பவர் பத்திரிகையில் வேலை செய்வதாக கூறி, உங்கள் நிறுவனத்தில் ஒரு கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. எனவே பத்திரிகையில் செய்தி வெளியிடப்போகிறோம். இந்த செய்தியை வெளியிடக்கூடாது என்றால் ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என […]
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னையில் பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு, பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை இடையூறு போன்ற காரணங்களால் சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை, கருணாநிதி நுழைவுவாயில் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த கடந்த 2012-ஆம் ஆண்டே தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்த தடையை மீறியும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் […]
புழல் மத்திய சிறையில் ஜெயிலராக இருந்த ஜெயராமன், கைதியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆதாரத்துடன் சிக்கிய பிறகும் கூட நடவடிக்கைக்கு உள்ளாகாமல் தப்பி வந்த நிலையில் மதுரை மத்திய சிறைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் சென்னையை அடுத்துள்ள புழல் மத்திய சிறையின், விசாரணைக் கைதிகளுக்கான பிரிவின் ஜெயிலராக இருந்தவர் ஜெயராமன். கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சிறை வளாகத்திற்கு அருகே ரசாயனம் தடவிய 40 […]
போக்சோ சட்டத்தின் கீழ், சென்னை திருநின்றவூர் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பினி ஆக்கிய ஆட்டோ ஓட்டுனரை போலிசார் கைது செய்தனர். திருநின்றவூர் நெமிளிச்சேரி ரயில் நிலையம் பகுதியில் டீ கடை நடத்தி வரும் பெண் ஒருவர், உடல் நிலை சரியில்லாத தன்னுடைய 12 வயது மகளுக்கு ஜூஸ் வாங்கி அதனை ஆட்டோ ஓட்டுனர் பரமசிவத்திடம் கொடுத்தனுப்பியுள்ளார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பரமசிவன், ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிறுமியை பாலியல் […]
சென்னையில் வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதியளிதுள்ளது. பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றும் தடை செய்யப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தினால் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.போராட்டத்தில் ஈடுபடும் கட்சி, அமைப்புகளின் வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. வழக்கு விவரம் : காவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி […]
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், வெளியேற மறுத்ததால், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பள்ளிக்கு ஆசிரியர்களை மாற்றம் செய்தனர் காவல் துறையினர். இடைநிலை ஆசிரியர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 2 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சமவேலைக்கு சம ஊதியம் கோரி டி.பி.ஐ. வளாகத்தில் போராடியவர்கள் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காவிரி விவகாரத்தைவிட மெரினாதான் தமிழக அரசுக்கு முக்கியமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு முன் காவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வருபவர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு. இவர் டெல்லியில் 40 நாட்கள் நடத்திய போராட்டம் வித்தியாசமானது. இப்போது சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளிக்கும்படி போலீசாரிடம் மனு அளித்துள்ளார். இதற்கு போலீசார் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனை […]
சென்னை அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் மணீஷ் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் என்று சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்ளை சம்பவம் முழு விபரம் : கொள்ளையன் மணீஷ்குமார் யாதவ் ஹீரோ ஹோண்டா பேஷன் இருச்சக்கர வாகனத்தில் வேகமாக அடையாறு இந்தியன் வங்கியில் கொள்ளையடித்து ஓடி விரைந்தான். பணப்பையை வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்திருந்த அவன், கையில் ஒரு துப்பாக்கி, கால்சட்டைப் பையில் ஒன்று என இரு நாட்டுத்துப்பாக்கிகளுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றான். […]
சென்னை ஐ.ஐ.டி. மாணவ – மாணவிகள் கட்டிப்பிடிக்கும் போராட்டம் நடத்தினர். கடந்த 17-ஆம் தேதி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பரை தோழமையாகக் கட்டிப் பிடித்ததாகவும், இதனை உதயகுமார் என்ற ஐ.ஐ.டி ஊழியர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கலாச்சாரக் காவலர்கள் என்ற பெயரில் மாணவிகளை புகைப்படும் […]
கொள்ளையன் மணீஷ்குமார் யாதவ் ஹீரோ ஹோண்டா பேஷன் இருச்சக்கர வாகனத்தில் வேகமாக அடையாறு இந்தியன் வங்கியில் கொள்ளையடித்து ஓடி விரைந்தான். பணப்பையை வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்திருந்த அவன், கையில் ஒரு துப்பாக்கி, கால்சட்டைப் பையில் ஒன்று என இரு நாட்டுத்துப்பாக்கிகளுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றான். வங்கியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அடையாறு வாட்டர் டேங்க் சிக்னல் அருகே சென்ற போது சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததால் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. வங்கி வாடிக்கையாளர்கள் சிலர் […]
பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறி உள்ளார். பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.சென்னை அண்ணா பல்கலைகழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மே. 30 இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன.பொறியியல் படிப்புக்கு வரும் 29ம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வெளியீடு. விண்ணப்பங்களை பதிவு […]
சென்னையில் வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அவர்களின் 3 வயது பேத்தி தாத்தா பாட்டியைக் காண வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் அருகில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருபவர் உதயகுமார். குழந்தையை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார் அவரது பாட்டி . சாமி கும்பிட்டுவிட்டு கிளம்பும்போது, குழந்தை இங்கேயே விளையாடட்டும், நான் பாத்துக்கொள்கிறேன் என்று பூசாரி கூறியுள்ளார். அதை நம்பிய பாட்டியும் குழந்தையை விட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பி […]
சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம் தனலட்சுமி நகரைச்சேர்ந்தவர் டேவிட் பால்ராஜ்(வயது 53). தொழில் அதிபர். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பணத்தை எடுத்து, பையில் வைத்துக்கொண்டு காரில் வீட்டுக்கு சென்றார். அப்போது விருகம்பாக்கம் குமரன் காலனி அருகே அவர் காருடன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 2 திருநங்கைகள், டேவிட்பால்ராஜை ஆசீர்வாதம் செய்தனர். அவர் காரில் வைத்திருந்த பணப்பையையும் ஆசீர்வாதம் செய்து தருவதாக கூறினர். அதை நம்பி அவரும் பணப்பையை […]