சென்னையில் உள்ள நுங்கம்பாக் கத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் இவர் கார் டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் சுவரில் ஏறி குதித்த போது கால் தடுமாறி அருகில் இருந்த இரும்பு கதவின் மேல் விழுந்தார். அப்போது கதவில் இருந்த வேல் போன்ற கூர்மையான கம்பி அவர் முதுகு பகுதியில் குத்தியது.இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், காயத்தின் தன்மையை உணர்ந்து தீயணைப்பு படையினரை அழைத்தனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் ரெயில் […]
ஓட்டேரி கொன்னுர் நெடுஞ்சாலை சென்னை அயனாவரத்தில் சிக்னல் அருகே சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த 50 வருடங்களாக 21 பேர் வீடுகளை கட்டி ஆக்கிரமித்து வந்தனர். அதில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வந்தனர். திரு.வி.க.நகர் மண்டல (மண்டலம் 6) மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தின் அளவை குறிப்பிட்டு கொடுக்கும்படி அதிகாரி அருணா மற்றும் செயற்பொறியாளர் செந்தில்நாதன் ஆகியோர் அயனாவரம் தாசில்தார் மஞ்சுநாதனை கேட்டுக்கொண்டனர். அதன்படி தாசில்தார் தலைமையிலான […]
கட்டுமானப் பணிகள் நடைபெறும்போதே சென்னை சேத்துப்பட்டில் கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஸ்பர்டாங்க் (spartank)சாலையில் வணிகவளாகம் ஒன்றுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதில், அமிதா சிட்டி டெவலபர்ஸ் ஜி.பி.ஏ. (GPA) எனும் கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் குணச்சந்திரன் தலைமையில் பிற மாநிலத்தவர் உள்பட சுமார் 30 பேர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ரெஸ்டாரன்ட், உள்ளிட்ட பல்வேறு […]
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும் ஒருங்கிணைந்த நாடார் சங்கத்தினர் தங்களின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய நாடார்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் த.பத்மநாபன் நாடார் தலைமை தாங்கினார். சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க பொருளாளர் மயிலை எம்.மாரித்தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தட்சணமாற நாடார் சங்க தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார், […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மையை மறைக்கவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். மத்தியில் 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ள பாஜக அரசு தூத்துக்குடி சம்பவம் குறித்து இதுவரை இரங்கல் தெரிவிக்காததே அதன் சாதனை என்று ஸ்டாலின் விமர்சனம் செய்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
நீரவ் மோடியின் வங்கி மோசடி போல சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் ரூ.824.15 கோடி மோசடி செய்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சிபிஐயிடம் புகார் அளித்தது. சென்னை தியாகராய நகரில் ‘கனிஷ்க் கோல்டு’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக பூபேஷ் குமார் ஜெயின், நீதா ஜெயின் ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்த நிறுவனம் கிரிஸ் என்ற பெயரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக் கூடங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது. […]
துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், பணிமனைகள் என போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் மட்டும் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை மற்றும் பெரம்பூர் பகுதிகளில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டை பனகல் […]
விரும்பிய பாடப்பிரிவில் மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்க ஏதுவாக கூடுதல் மருத்துவக் கல்லூரிகளை துவங்க வேண்டும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை..
மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகே உள்ள பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ப்ட்ட்ன்ர். இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று மெரினாவில் நடத்துவதற்காக […]
மெரினாவில் நினைவேந்தல் பேரணியின்போது கைதான வைகோ, திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் விடுவிக்கபட்டுள்ளனர்.மெரினாவில் தடையை மீறி பேரணியில் பங்கேற்று கைதான அனைவரையும் போலீஸார் விடுவித்தனர். இதற்கு முன்: இலங்கையில் போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதாக தகவல் ஒன்று வெளிவந்தது. 13 இயக்கங்கள் ஆதரவு தெரிவித்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்திருந்த நிலையில் மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு தடை […]
மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். மெரினாவில் போராட்டம், பொதுக்கூட்டம் உட்பட அனைத்து வகையான போராட்டங்களுக்கும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தடை விதித்துள்ளார். இந்நிலையில், இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதாக உளவுப் பிரிவு போலீஸார், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். […]
திருவல்லிக்கேணியில் உள்ள வேலைவாய்ப்பு மையத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக மாற்றுத்திறனாளிகள் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். 2014-ஆம் ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பட்டதாரி கூட்டமைப்பு சார்பாக இந்த போராட்டம் இன்றுடன் சேர்ந்து கடந்த நான்கு நாட்களாக நடந்து வருகின்றது 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் தமிழகத்தின் அனைத்து மாவட்டதிலிருந்தும் 400 மாற்றுத்திறனாளிகள் தேர்வில் வெற்றிபெற்று வேலைவாய்ப்பிற்கு தகுதி பெற்றனர். ஆனால் 2014-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் வெற்றிபெற்றும் தற்போது வரை பணியிடங்கள் […]
சென்னை புழல் மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிடப்பட்ட கைதியை முறைகேடாக விடுவித்த குற்றச்சாட்டில் சிறைத்துறை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவர் கொலை முயற்சி வழக்கில் விசாரணைக் கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதற்கு மாறாக ரவி புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் இது குறித்து விசாரித்த போது, […]