இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் தேவை மற்றும் மாநிலங்களின் நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து முதன் முதலாக நிதிஆயோக் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. மத்திய நீர்வளத்துறை மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் அமைச்சகங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ‘ஒன்றிணைந்த நீர் மேலாண்மை குறியீடு’ என்ற அந்த அறிக்கையை நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று வெளியிட்டார். நிதி ஆயோக்கின் இந்த அறிக்கை இந்திய மாநிலங்களின் நீர் மேலாண்மை குறைபாட்டை அப்பட்டமாக விளக்கி […]
சென்னையில் முக்கிய நாட்களில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் விபத்து ஏற்படுகிறது. இதைத் தடுக்க நேற்று போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு சோதனை செய்ததில் ஏராளமான வாகனங்கள் சிக்கின. சனி, ஞாயிறு இரவு, முக்கிய விஷேச தினங்களில் சென்னையில் உள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞர்களில் குறிப்பிட்ட வகையினர் சென்னை கடற்கரைச் சாலை, அடையாறு, ராதாகிருஷ்ணன் சாலை போன்ற இடங்களில் மோட்டார் சைக்கிள் ரேஸில் ஈடுபட்டு வருவது சமீப காலமாக வாடிக்கையாகி வருகிறது. சிலர் சாகசத்திலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறு […]
எழும்பூர் பழைய கமிஷனர் ஆபீஸ் அருகே பாந்தியன் சாலையில் போலீசாருக்கான மருத்துவமனை 1964-ம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. 30 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவ மனையில் தினமும் 500 போலீசார் வந்து சிகிச்சை பெற்று வந்தனர். பழமையான இந்த மருத்துவ மனையை நவீனப்படுத்த 2016-ம் ஆண்டு முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. தற்போது 4 மாடிகளுடன் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பில் புதிய கட்டிடம் […]
காவல் துறையினர் ரோந்து, வாகன சோதனை நடத்தப்பட்டாலும் அதையும் மீறி தினந்தோறும் சென்னையில் அரங்கேறி வருகிறது கத்தி முனை வழிப்பறி சம்பவங்கள். கடந்த 9-ம் தேதி திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் தனியார் பள்ளியொன்றின் பாதுகாவலர் கணேசன் என்பவரை கத்தியால் தாக்கி கொள்ளையர்கள் செல்போன், பணத்தை பறித்து சென்றனர். பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலேயே கொள்ளையர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டியுள்ளனர். இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய திருவொற்றியூரை சேர்ந்த பார்த்திபன் மற்றும் மணி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். […]
110 ஆண்டுகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு நிறைவடைந்ததை அடுத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 1908 ஆம் ஆண்டு ஜுன் 11 ஆம் தேதி எழும்பூர் ரயில் நிலைய புதிய கட்டடம் கட்டப்பட்டு, ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது. அப்போது போட் ரயில் எனப்படும் 3 ரயில்கள் இயக்கப்பட்டன. 110 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 11 நடைமேடைகள் அமைக்கப்பட்டு 55 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள்பயணிக்கின்றனர். எஸ்களேட்டர், சிசிடிவி போன்ற வசதிகளும் […]
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர்கள் மனோகரன்-கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்கள் இருவருமே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மூத்த மகன் சிவநாதன் (வயது 25). இவர் சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்று அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு நள்ளிரவில் மானாமதுரைக்கு வந்து தனது பெற்றோர்களை சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவர் விஷம் குடித்துள்ளதாக அவரது பெற்றோரிடம் […]
காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் கிஷோர் குமார் கொலைமிரட்டல் விடுப்பதாக, திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் ஞாயிறன்று அண்ணாநகரில் உள்ள கல்லூரியில் நடைபெற இருப்பதாக கூறினார். அந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தம்மை விலகிக்கொள்ளுமாறு, பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கிஷோர்குமார் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டினார். தேர்தலின் போது கலவரத்தை ஏற்படுத்துவதாக மிரட்டும் அவர் மீது நடவடிக்கை […]
பெண் டிக்கெட் பரிசோதகரும், பயணியும் சென்னை ரயில் நிலையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கூடுவாஞ்சேரியிலிருந்து வந்த டீனு என்ற பயணி தண்ணீர் பிடிப்பதற்கு ரெயிலில் இருந்து இறங்கி உள்ளார். அங்கு நின்ற டிக்கெட் பரிசோதகர் நெஸ்கல் குமாரி, அவரிடம் பயணச்சீட்டு கேட்டு அவரது சட்டையை பிடித்து இழுத்ததால் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் […]
200 சவரன் தங்க நகைகள் மற்றும் 7 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை சென்னை வேளச்சேரி அருகே கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் அரளிக்கோட்டையைச் சேர்ந்த இளங்கோஸ்வரன், வேளச்சேரியை அடுத்த சீதாராமன் நகர் ஜெயந்தி தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று இளங்கோஸ்வரன் குடும்பத்தினருடன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள சொந்த ஊரான சிவகங்கைக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவிலிருந்த 200 […]
சமீபகாலமாக சென்னையில் தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து, வரும் விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தப்படுகிறது. துபாயில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த தங்கங்களை கடத்தி வந்ததது கர்நாடகாவை சேர்ந்தவா் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், 13 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவரிடம் தங்களை […]
கார் திடீரென சென்னை பரங்கிலையில் நடுச்சாலையில் தீப்பற்றி எரிந்தது. பூந்தமல்லியில் இருந்து கிண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த மகேந்திரா கே.யூ.வி. 100 வகை கார் பரங்கிமலை பட்ரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென எஞ்சினில் இருந்து புகை வெளியேறியது. விபரீதத்தை உணர்ந்து காரில் இருந்த பெண்ணும் ஓட்டுநரும் அவசர அவரமாக வெளியேறிய நிலையில் கார் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து பரங்கிமலை தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுமையாகத் தீப்பிடித்து எரிந்துவிட்டது. மேலும் செய்திகளுக்கு […]
சென்னையில் சென்டிரல், எழும்பூர் என இரண்டு ரெயில் முனையங்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தாம்பரம் ரெயில் நிலையம் முனையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.49 கோடி செலவில் அதற்கான பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று மூன்றாவது முனையத்தை மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார். மேலும், தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட அந்த்யோதயா ரெயிலையும் மந்திரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை […]
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் சார்லஸ் நகர் அவ்வையார் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மதுமிதா என்பவர் இவருடைய மனைவி ஆவார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் இன்ஜினீயரிங் முடித்து உள்ளனர். மதுமிதா சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் வேலை செய்து வந்தார். வெங்கடேசன் சென்னை உள்ள தியாகராயநகரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மதுமிதாவின் பெற்றோர், பட்டாபிராமில் வசித்து வருகின்றனர். […]