ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் சென்னையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் மற்றும் 3 நம்பர் லாட்டரி விற்பனை போரூர் ரவுண்டனா அருகே நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீசார் போரூர் விக்னேஸ்வரா நகரில் ஒரு வணிக வளாகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரை தமிழகக் கடற்கரைகளிலேயே அதிகமான மனித உயிர்களைப் பலிவாங்கும் இடமாகச் மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 64 பேர் பலியாகியுள்ளனர். ஆசியாவிலேயே அழகிய கடற்கரை சென்னை மெரினா கடற்கரையாகும். சென்னையில் வசிக்கும் மக்களுக்கு வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் பொழுதுபோக்கும் முக்கிய இடமாக மெரினா கடற்கரை இருக்கிறது. விடுமுறை நாட்களில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் குளித்து, விளையாடி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், அவ்வாறு கடலில் விளையாடுபவர்கள் அதிகமான ஆழத்தில் செல்லும்போது மிகப்பெரிய […]
வயதான பெண்களை குறி வைத்து சென்னையில் 68 வயது நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை வளசரவாக்கம் வேலன் நகரில் வசிக்கும் லஷ்மி என்ற 70 வயதான பெண் அணிந்திருந்த 4 சவரன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். ஆழ்வார் திருநகரில் கடைக்கு செல்வதற்கான நேற்று சாலையோரம் நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 68 […]
தமிழக அரசு சென்னைக்கு அடுத்ததாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். நிலம் அளவீடு தொடர்பான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம் என 2 முனையங்கள் உள்ளன. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து […]
சென்னை அருகே 3 கோவில்களில் இருந்து 80 கோடி ரூபாய் மதிப்பிலான 8 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் ராமானுஜபுரம் கிராமம் மணிகண்டேஷ்வரர் கோவிலில் இருந்து 2015ம் ஆண்டு சிவன் பார்வதி உலோக சிலைகள் களவு போனது. இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சவுந்திரியபுரம் ஆதிகேசவபெருமாள் கோவிலில் இருந்து ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் சிலைகள் கடத்தப்பட்டன. வந்தவாசி அருகே உள்ள […]
கடலோர காவல்படையினர் மீன் பிடிக்க சென்ற போது படகில் தண்ணீர் புகுந்து கடலில் தத்தளித்த காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை மீட்டு சென்னை அழைத்து வந்தனர். சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் 9 பேர், விசைப்படகில் சென்னை கடற்கரையில் இருந்து 98 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடிக்கச் சென்றபோது என்ஜின் அறையில் அதிக அளவு கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் படகை மேற்கொண்டு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு மீனவர்கள் 9 பேர் கடலில் தத்தளித்துள்ளனர். இதுபற்றி தகவல் […]
இரவு நேரங்களில் சென்னையில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், காலை நேரத்தில் சென்னையில் 5 இடங்களில் தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்களை விரட்டிச்சென்று ஆந்திராவில் வைத்து தனிப்படையினர் கைது செய்துள்ளனர் சென்னையில் சமீப நாட்களாக இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறையினர் இரவு நேரத்தில் இரண்டு ஷிப்டிகளில் களமிறங்கி குற்ற தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஸ்ட்ராமிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் கடந்த […]
சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் சென்றபோது இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் சென்றபோது இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இயந்திரக்கோளாறை அடுத்து உடனடியாக சென்னை விமானநிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது . பின்னர் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்தது ஏர் இந்தியா நிறுவனம்.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
போலி ஆவணங்களை கொண்டு, பாஸ்போர்ட் பெற முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கே.கே.நகரில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் உதவி பாஸ்போர்ட் அதிகாரி ஹேமநாதன் என்பவர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நிதுஜென் என்பவர், போலி ஆவணங்கள் மூலம், பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார். இதையடுத்து, விசாரணை நடத்திய காவல்துறையினர், நிதுஜென் என்ற அந்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும், பொழிச்சலூரில் உள்ள தனது உறவினர் […]
திரைப்பட தயாரிப்பாளர் இசக்கிராஜா உள்ளிட்ட 2 பேர் சொகுசுக் கார்கள் வாங்குவதாகக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவர் சொகுசுக் கார்கள் வாங்குவதாகக் கூறி ஸ்டேட் வங்கியின் வேளச்சேரி கிளையில் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். பின்னர் இந்தத் தொகையை வைத்து ‘ஒயிட் ஸ்கிரீன் புரொடக்சன்ஸ்’ என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் அருவா சண்ட […]
மாநகரப் பேருந்தை சிறைப் பிடித்து சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாடிய வீயோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் 21 ஜி பேருந்தை டி.ஜி.பி. அலுவலகம் அருகே சிறைப்பிடித்த மாணவர்கள், அதில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு பேருந்தை ஆக்கிரமித்தனர். பேருந்தின் ஜன்னல் வழியாக ஏறி மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் ஆட்டம்போடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. மாநிலக் கல்லூரி மாணவர்களின் பஸ் டே கொண்டாட்டத்தை இருசக்கர வாகனங்களில் உடன் வந்த சக மாணவர்கள் படபிடித்து சமூக […]
சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் அன்பு, கல்லூரி மாணவர்கள் தவறான பாதையில் பயணித்தால், எதிர்காலமே கேள்விக்குறியாகும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கல்லூரி செல்லும் மாணவர்கள் மீது பெற்றோரும் கண்காணிப்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. சென்னையில், முதல் நாளே பட்டாக்கத்தி மற்றும் பட்டாசுகளுடன் கல்லூரிகளுக்கு சில மாணவர்கள் வந்திருந்தனர். கல்லூரி வளாகம், பேருந்து நிறுத்தம், கல்லூரி வரும் சாலைகளில் கண்காணிப்பில் […]
சென்னை பள்ளிக்கரணையில் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தமது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவரான ஆனந்துக்கு தற்போது தான் பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளிக்கரணை ஜெயச்சந்திரா நகரில் தாய், தந்தை, மனைவி மற்றும் இரட்டைக் குழந்தைகளுடன் வசித்து வந்த அவர், நள்ளிரவில் 4ஆவது மாடியில் இருந்து குதித்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்தன் உயிரிழந்தார். நெருக்கடியான சூழல் […]
கஞ்சா போதை கும்பலின் அட்டகாசம் சென்னை வியாசர்பாடியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள எஸ்.ஏ. காலனிக்கு நள்ளிரவில் கஞ்சா போதையில் ஒரு கும்பல் வந்துள்ளது. முகத்தை துணியால் மறைத்திருந்த அந்தக் கும்பல் திடீரென காலனியின் எட்டு மற்றும் பத்தாவது தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை கற்களை வீசியும், கட்டைகளால் தாக்கியும் அடித்து சூறையாடியது. ஆட்டோ […]
வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பி தரா முடியாததால் சென்னையில் தொழிலதிபரை காரில் கடத்தி அடித்து துன்புறுத்தி சாலையில் வீசி சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. ஈக்காட்டுதாங்கல் அம்பாள் நகரை சேர்ந்தவர் விஜய் பிராங்ளின். ஞாயிற்று கிழமை இரவு தனது வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, இரண்டு பக்கத்திலும் கார்கள் வந்து நின்றன. சிறிது நேரத்தில் விஜய் பிராங்ளினை காரில் ஏற்றி கடத்திச் சென்ற கும்பல், காரில் வைத்தே அடித்து துன்புறுத்தியது. அண்ணா நகர் அருகே கார் வேகமாக […]
கடல் மாசு குறித்து சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படகுப் போட்டி நடைபெற்றது. ஆண்டுதோறும் கடலில் சேரும் மாசுக்களின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் படகுப் போட்டி நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர் மாவட்ட முற்போக்கு மீனவர் சங்கம் மற்றும் கடல் விழிப்புணர்வு குழு சார்பில் நடைபெற்ற இந்த படகு போட்டியை […]
1,106 கொள்ளை, 815 செயின் பறிப்பு, 750 செல்போன் பறிப்புகள் சென்னையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, தற்போது ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னையில் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்கள், பைக்கில் கணவருடன் செல்பவர்கள், சாலையோரமாக பேசிக்கொண்டே நடந்து செல்வோர் என பெண்களிடம் தொடர்ந்து நகை, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. கத்திமுனையில் கடத்தி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடக்கத் […]
வானிலை ஆய்வு மையம்,தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 11 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடலூர் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 8 சென்டி மீட்டர் மழை […]
சட்ட மாணவர்களுக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே சென்னையில் நள்ளிரவில் ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சவிதா சட்டப் பல்கலைக் கழக மாணவர்கள் 14 பேர் இரண்டு கார்களில் கோயம்பேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆட்டோ ஒன்றின் மீது உரசியதால் ஆட்டோவில் பயணித்தவர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் துரத்தியதை அடுத்து முதலில் தப்பிச் சென்ற ரவுடிகள், பின்னர் கோடம்பாக்கம் பெட்ரோல் பங்க் எதிரே வந்து வம்புக்கு இழுத்து […]
இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை மெட்ரோ ரயிலிலும் மாநகரப் பேருந்துகளிலும் பயணம் செய்ய ஒரே ஸ்மார்ட் அட்டை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் முன்கூட்டியே பணம் செலுத்தி ஸ்மார்ட் அட்டையைப் பெற்றுக்கொள்கின்றனர். இதில் ஏற்கெனவே செலுத்திய தொகை முடிந்ததும் மீண்டும் பணம் செலுத்தி அட்டையில் ஏற்றிக்கொள்ளலாம். இதேபோல் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்வோர் தூர வரையறையின்றி ஒரு மாதம் முழுவதும் விருப்பம்போல் பயணம் செய்ய ஆயிரம் ரூபாய் சீட்டு எடுக்கின்றனர். குறிப்பிட்ட இடங்களுக்கு இடையில் […]