சென்னை ராயப்பேட்டையில் காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையில் ஆனந்தன் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட ஆனந்தன் காவலர் ராஜவேலுவை அரிவாளால் தாக்கியவர் என கூறப்படுகிறது. நேற்று ராயப்பேட்டை முதல் நிலைக் காவலர் ராஜவேல் ரவுடிகளால் வெட்டப்பட்டார்.போலீசாரைத் தாக்கி விட்டுத் தப்ப முயன்றதால் சுட்டுக்கொலை எனத் தகவல்.
சென்னையில் இடப்பற்றாக்குறை மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பால் மோனோ ரயில் திட்டம் கொள்கை அளவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.வழக்கம்போல் அதிமுக -திமுக இடையே விவாதம் நடைபெற்றது.இதில் திமுகவை சேர்ந்த அன்பில் மகேஷ் மோனோ ரயில் குறித்து கேள்வி எழுப்பினார்.இந்த கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார். அன்பில் மகேஷ் வேளச்சேரி- வண்டலூர் மோனோ ரயில் திட்டம் பற்றிய கேள்வி எழுப்பினார்.இதற்கு சென்னையில் இடப்பற்றாக்குறை மற்றும் மெட்ரோ ரயில் […]
சென்னையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 515 புதிய பேருந்துகளை தொடக்கி வைத்தார். ரூ.134 கோடி ரூபாய் செலவில் குளிர்சாதன, படுக்கை வசதி கொண்ட 515 புதிய பேருந்துகள் தயாரிக்கபட்டது.இந்த பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
புதிய செயலி,பேஸ் டேகர் (Facetagr), கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.இது குற்றங்கள் சம்பந்தப்பட்ட மக்களை பிடிக்க உதவும் செயலி ஆகும். சென்னை போலீஸ் துறையிலுள்ள தியாகராயநகர் காவல்துறை நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயல்முறை, குற்றவாளிககளை பிடிக்க பெரும் உதவியாக இருந்ததால் நகர முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து குற்ற காப்பகம் மூலம் சேகரிக்கப்பட்ட ஏறத்தாழ 45 ஆயிரம் பழைய குற்றவாளிகளின் படத்தை பதிவேற்றப்பட்டது.ரோந்து போலீஸ் சோதனையில் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரின் படத்தை எடுத்தால், அடுத்த […]
போலி பாஸ்போர்ட் மூலம் செல்ல முயன்ற 19 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து கனடா செல்ல முயன்ற 19 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான வட மாநிலத்தை சேர்ந்த 19 பேரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஐடி நிறுவனத்தின் மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை செய்துள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனம் ஓன்று உள்ளது .தற்போது ஐடி நிறுவனத்தின் 9வது மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை செய்துள்ளார். ஐ.டி. பெண் ஊழியர் ப்ரியங்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்மநபர்களால் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கிரீன் வேய்ஸ் இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் உள்ளது.இந்நிலையில் தற்போது முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்மநபர்களால் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.இதனையடுத்து போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாமீனில் சிறையில் இருந்து வெளிவந்த ரவுடி பினு தலைமறைவானதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஜாமீனில் வெளிவந்த ரவுடி பினு, காவல்நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக கையெழுத்திடவில்லை என தகவல் கடந்த பிப்ரவரியில் ரவுடி பினுவின் பிறந்தநாளை சக ரவுடிகள் கும்பலாக கொண்டாடியிருந்தனர்.பின்னர் அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கில் மாநகராட்சி ஆணையர் மதியம் 1 ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அதில் பூக்கடை-பாரிமுனை வரையிலான பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2014ல் உத்தரவிடப்பட்டது.ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கில் மாநகராட்சி ஆணையர் மதியம் 1 ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் பயிற்சிக்கு வந்த மன்னார்குடி எஸ்ஐ பிரபாகரன் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை கோட்டூர்புரத்தில் பயிற்சிக்கு வந்த மன்னார்குடி எஸ்ஐ பிரபாகரன் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது.பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த கொள்ளையர்கள் ராஜேஷ், பாதுஷா 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து 11 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
வெப்பசலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. கடலில் 35-45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுரை வழங்கியுள்ளது வானிலை மையம்.
சென்னையில் நடிகர் கமல்ஹாசன் வீட்டில் மர்ம நபர் ஏறிக்குதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இல்லம் சென்னையில் உள்ள ஆழ்வார் பேட்டையில் உள்ளது.நேற்று காலை மர்மநபர் ஒருவர் கமல்ஹாசன் வீட்டிற்கு வந்துள்ளார்.அங்கு வந்த அவர் கமல்ஹாசன் வீட்டு காவலாளியிடம் விசாரித்துள்ளார்.பின்னர் அவர் காவலரிடம் பேசியபடி கமல்ஹாசன் வீட்டின் சுவற்றில் ஏறி குதித்துள்ளார்.இதையறிந்த காவலாளி காவல் துறையினருக்கு புகார் அளித்தார். பின்னர் காவல்துறையின் விசாரணையில் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை உள்ள நீலாங்கரையில் ரூ.14,000 மதிப்புள்ள ரூ.100 மற்றும் ரூ.50 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . சென்னை உள்ள நீலாங்கரையில் ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி நாகசுப்பிரமணியம் வீடி இருகின்றது.அவரது வீட்டில் இருந்து ரூ.14,000 மதிப்புள்ள ரூ.100 மற்றும் ரூ.50 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு. இப்பொது சென்னையில் உள்ள சுற்றுலா இடங்களைப்பற்றி காண்போம். சென்னை : கடற்கரை அண்ணாநகர் கோபுரம் பிர்லா […]
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காலணிகளை அவரது உதவியாளார் அணிவித்து விட்டது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் சுமார் 20,000 போலீசார் ரத்ததானம் செய்கின்றனர். துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஜெயக்குமார்,விஜயபாஸ்கர், வேலுமணி, செங்கோட்டையன், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலனிகளை கழற்றிவிட்டு முன்னால் முதல்வர் ஜெயலலிதா […]
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தின் முன் நர்மதா நந்தக்குமார் நண்டுவிடும் போராட்டம் ஈடுபட்டார். சென்னையை அடுத்த பட்டினம்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் இல்லம் உள்ளது.இன்று அமைச்சரின் வீட்டிற்கு வந்த பெண் நூதனமாக போராடினார். அவர் பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட வீடுகளை அமைச்சர் சரி செய்யாததை கண்டித்து நண்டுகளை விட்டு நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் சுமார் 20,000 போலீசார் ரத்ததானம் செய்கின்றனர். துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஜெயக்குமார்,விஜயபாஸ்கர், வேலுமணி, செங்கோட்டையன், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இன்றுடன் சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள், இதுவரை தங்களுக்கான நிவாரணம் வேண்டி காத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மவுலிவாக்கம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் 61பேர் உயிரிழந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் அருகிலிருந்த மூன்று வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டை இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் […]
மெட்ரோ ரயில் பணிகளுக்கான நில அளவை ஆய்வு சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் பணிகள் தொடங்கியுள்ளது. 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான புதிய வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன.OMR சாலையில் கொட்டிவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் வர உள்ளன. மெட்ரோ ரயில் அதிகாரிகள்,கொட்டிவாக்கம் நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுகுப்பம், பிடிசி காலணி, ஒக்கியம் துரைப்பாக்கம், , கரப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் […]
திருமணம் செய்ய காதலன் மறுப்பதாக கூறி சென்னை மாதவரத்தில் கல்லூரி மாணவி 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மாதவரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும்,பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் அந்த மாணவியும், 2 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் மாணவியின் வீட்டாருக்கு தெரியவந்ததால், திருமணம் செய்து கொள்ளலாம் என்று மணிகண்டனை அந்த பெண் வலியுறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மணிகண்டன் காதலியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் இரண்டாவது மாடியில் […]