சென்னையில் விடிய விடிய மழை: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

School Leave

சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை பெய்த நிலையில், அம்பத்தூர், பாடி, கொரட்டூர், கள்ளிகுப்பம். மதுரவாயல், போரூர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

தற்போதும், மழை பெய்து கொண்டிருக்கிறத, இதனால் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்