ரஷ்யா செல்லும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள்.! விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அசத்தல் விசிட்…

ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு தமிழக அரசு பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் செல்ல உள்ளனர்.
ராக்கெட் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையில் ராக்கெட் சயின்ஸ் எனும் பயிற்சி வகுப்பு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் 220 பேர் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரஷ்யாவுக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ரஷ்யாவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி இந்த 50 மாணவர்களும் பார்வையிட உள்ளனர். இவர்கள் அந்நாட்டிற்கு செல்ல ஒவ்வொரு மாணவர்களுக்கும் 2 லட்சம் ரூபாய் செலவாகிறது இதற்கு பலரும் உதவி செய்து வருகின்றனர்.
ஏற்கனவே ஒரு அறக்கட்டளை, தனியார் நிறுவனம் என நன்கொடை வழங்கி வரும் நிலையில் நேற்று பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி நான்கு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025