ஃபார்முலா 4 கார் ரேஸ் நடக்குமா.? இரவு 8 மணிவரை கெடு விதித்த உயர்நீதிமன்றம்.!
ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த FIA தர சான்று பெற வேண்டும் என இரவு 8 மணி வரை கால அவகாசம் அளித்துள்ள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த FIA தர சான்று பெற வேண்டும் என இரவு 8 மணி வரை கால அவகாசம் அளித்துள்ள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னையில் இன்றும் நாளையும் ஃபார்முலா 4 கார் ரேஸிங் பந்தயம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிமீ தூரம் அளவுக்கு 19 திருப்பங்களை கொண்ட இரவு நேர சர்கியூட் ரேஸிங் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த கார் பந்தயம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்துவதற்கு FIA எனும் தரச்சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும். இந்த சான்றிதழானது இன்று மதியம் 12 மணிக்குள் வாங்கி சமர்ப்பிக்க முன்னர் உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனால் பிற்பகல் 2.30 அளவில் இருந்து போட்டிகள் ஆரம்பமாகும் என முதலில் கூறப்பட்டு இருந்தது.
அதனை அடுத்து போட்டி நடத்தும் அமைப்பு சார்பில் 4 மணி நேர அவகாசம் கேட்கப்பட்டு இருந்தது. இதனால் மாலை 5 மணியளவில் போட்டிகள் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போதுவரையில் FIA எனும் தரசான்றிதழ் பெறப்படாததால் போட்டிகள் இன்னும் தாமதமாகும் என கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன் விசாரணை நடைபெற்ற போது, அரசு தரப்பிலிருந்து வாதிடுகையில், ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த FIA சான்று பெற இன்று இரவு 9 வரை கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் நீதிபதி இன்று இரவு 8 மணி வரை கால அவகாசம் அளித்து அதற்குள் FIA சான்று வாங்கி சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஒருவேளை FIA தர சான்று பெற தாமதமானதால் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த போட்டி நடத்த மொத்தம் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் பாதுகாப்பாக கார் பந்தயம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
FIA (International Federation of Automobile ) சான்று என்பது ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கேற்கும் ஓட்டுநர்கள் அதற்கேற்ற தகுதி சான்றிதழை சர்வதேச கார் பந்தய கூட்டமைப்பிலிருந்து பெற வேண்டும். சென்னையில் திடீரென பெய்த மழை காரணமாக தகுதி சான்றிதழ் பெற தாமதமாகிறது என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025