IPL 2018:சி.எஸ்.கே டி-ஷர்ட் அணிந்தவர்கள் மீது கருணாஸ் ஆதரவாளர்கள் கொடூர தாக்குதல் …!
கருணாஸ்-ன் முக்குலத்தோர் புலிப்படையை சார்ந்தவர்கள் சி.எஸ்.கே ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதற்கு முன் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் கதவை இழுத்து பூட்டு போட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தற்போது சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் டிக்கெட்களை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல விடுதலை சிறுத்தை கட்சியினர் திருவல்லிக்கேணியில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை வழியிலேயே கைது செய்தனர் போலீசார்.
இந்நிலையில் கருணாஸ்-ன் முக்குலத்தோர் புலிப்படையை சார்ந்தவர்கள் சி.எஸ்.கே ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ரசிகர் மீது தாக்குதல்,மேலும் சி.எஸ்.கே டி-ஷர்ட் அணிந்தவர்கள் மீதும் தாக்குதல்.கருணாஸ்-ன் முக்குலத்தோர் புலிப்படையை சார்ந்தவர்கள் சி.எஸ்.கே ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தினர் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.