சனி இரவு 10 முதல் ஞாயிறு வரை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை!
சனி இரவு 10 முதல் ஞாயிறு வரை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்பொழுது கொரோனா வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதில் ஒன்றாக காய்கறி சந்தை திறக்கலாம் என சில மாதங்களுக்கு முன்பாகவே உத்தரவு கட்டுப்பாடுகளுடன் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் பெரிய கடைகள் திறக்கப்பட்டு இருந்தது, கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் A-G வரையுள்ள 800 சிறிய கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்திற்கு சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிறு இரவு பத்து மணி வரைக்கும் விடுமுறை என தற்பொழுது அறிவிப்பு வெளியாகி உள்ளது.