கோவையில் மேட்ரிமோனியல் இனையதளம் மூலம் பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண், பெண்ணின் தாயார் உட்பட 3 பேரை கைது செய்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பாலமுருகன் (27). இவருக்கு சுருதி என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. 3 மாதம் பழகியவுடன் பாலமுருகனிடம் திருமணம் செய்துக்கொள்வதாக சுருதி கூறியுள்ளார். இந்நிலையில், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தவணை முறையில் ரூ.45 லட்சம் பெற்றுள்ளார். பாலமுருகனும் வருங்கால மனைவி என நம்பி பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற சுருதி சிறிது நாட்களில் காணாமல் போனார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன், மோசடி குறித்து கோவை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பாலமுருகனின் புகாரை ஏற்ற சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து பி.என்.பாளையத்தை சேர்ந்த சுருதி (21), தாய் சித்ரா (45), சகோதரர் பிரசன்ன (38) வெங்கடேசன் ஆகிய மூவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் இளம்பெண் ஸ்ருதி முகநூல், மேட்ரிமோனி மூலம் ஆண்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்து பணம் பரித்தது தெரியவந்துள்ளது.
source: dinasuvadu.com
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…