“மதுக்கடைகளை நோக்கி குவியும் அதிமுகவினர்” கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீஸ் திணறல்..!!
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் 31 மாவட்டங்களில் கொண்டாடி முடித்து நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் செப்டம்பர் 30 (ஞாயிறு) அன்று மாலையில் பிரமாண்ட விழாவுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இன்று காலை முதலே சென்னையில் பல்வேறு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்நிலையில் MGR நூற்றாண்டு விழாவிற்காக சென்னை வந்த அதிமுக-வினர் தொண்டர்கள் டாஸ்மாக் கடைகளை நோக்கி சென்று கொண்டுள்ளதால் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீஸ் திணறி வருகின்றனர்.டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை ஜோராக நடைபெறுகிறது.
DINASUVADU