எப்.ஐ.ஏ சான்றிதழ் ஓகே.! ஃபார்முலா 4 கார் ரேஸிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா.? 

ஃபார்முலா 4 கார் ரேஸிங் பந்தயத்திற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (F.I.A) முதற்கட்ட அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Formula 4 Car racing in Chennai

சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸிங் பந்தயத்திற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (F.I.A) முதற்கட்ட அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை தீவுத்திடலில் இன்றும், நாளையும் ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பும் இணைந்து மேற்கொண்டன.

ஆனால், இந்த ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பான FIA (International Federation of Automobile)விடம் இருந்து பாதுகாப்பு சான்றிதழை பெறாமல் இருந்துள்ளனர் என தெரிகிறது. இதனால் பிற்பகல் நடத்த வேண்டிய போட்டிகள் தற்போது வரை நடைபெறாமல் இருக்கிறது.

இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு 8 மணி வரையில் காலஅவகாசம். அதற்குள் FIA சான்றிதழ் பெற வேண்டும் என உத்தரவிட்டனர். ஒருவேளை FIA சான்றிதழ் பெற தாமதமானால் போட்டியை தள்ளிவைக்கும் சூழல் ஏற்படும் எனவும் கூறப்பட்டது.

இப்படியான சூழலில் தான் FIA தற்போது பாதுகாப்பு குறித்து சோதனை நடத்தி சான்றிதழ் தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது ஃபார்முலா 4 கார் பந்தய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி முடிந்து சான்றிதழ் பெற்றவுடன் இரவு 7 மணிக்கு போட்டிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட பயிற்சி போட்டி இன்று இரவு 7 மணிக்கு துவங்கி, இரவு 11 மணிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக நாளை மாலை 6 மணியளவில் IRL எனும் International Racing League இறுதிப்போட்டி தொடங்கி இரவு 10.30 மணிக்குள் நிறைவடைய உள்ளது என அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிமீ சுற்றளவில் 19 திருப்பங்களைக் கொண்டு ஃபார்முலா 4 சர்கியூட் ரேஸிங் ஓடுதளம் மற்றும் அதனை பாதுகாப்பாக மக்கள் காணும்படியாக ஏற்பாடுகளும் சுமார் 200 கோடி ரூபாய் செலவீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்