சென்னையில் சம்பா சாகுபடி பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தொடர்ந்து 4வது நாளாக கடலூர் மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனம் முன்னிலையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்காமல் காப்பீடு நிறுவனம் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. விவசாயிகள் காப்பீட்டு தொகையை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் 4 நாட்களாக போராடி வரும் இவர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…