சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு : தலைமை ஆசிரியை பணியிடமாற்றம்.!
சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவில் சர்ச்சை கருத்துக்கள் பேசப்பட்ட விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : அசோக் நகர் அரசு பள்ளியில் அண்மையில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற நிகழ்வில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் முன்ஜென்மம், மாற்று திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தற்போது பள்ளிக்கல்வித்துறையில் பூதாகரமாக மாறியுள்ளார். மேலும், மகா விஷ்ணு அங்குள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பல்வேறு கண்டங்களை எதிர்கொண்டுள்ளது.
Read more – “மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்.” ஆவேசமான அமைச்சர் அன்பில் மகேஷ்.!
இதுகுறித்து 3,4 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மேலும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆசிரியரிடம் சர்ச்சை கருத்தை கூறிய மகா விஷ்ணுவை சும்மா விட மாட்டேன் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
இப்படியான சூழலில் இச்சம்பவம் தொடர்பான முதல் நடவடிக்கையை பள்ளி கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசியை, திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசுப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.