Categories: சென்னை

பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவை ரத்து! பொதுமக்கள் அவதி….

Published by
Venu

பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவை ரத்து! பொதுமக்கள் அவதி,
கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் பலர் ரெயில் சேவையையை நம்பியே வேலைக்கும், பள்ளி, கல்லூரிக்கும் சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் ரெயில்சேவையை குறைத்தும், ரத்தும் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ரெயில் சேவை மாற்றம் மற்றும் ரத்து குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.15, 9.30, 11.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 10.50, 11.25, 1.05 மணி ரெயில்கள் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.
வேளச்சேரி-திருவள்ளூர் காலை 9.05 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி ரெயில்கள் இன்றும், கடற்கரை-திருவள்ளூர் காலை 9.50 மணி, திருவள்ளூர்-கடற்கரை காலை 11.05 மணி ரெயில்கள் நாளையும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட்-அரக்கோணம் காலை 9.10, 11.05, 12.50 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.45 மணி, மூர்மார்க்கெட்-திருத்தணி காலை 10, 11.45 மணி, மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் காலை 10.30, மதியம் 12 மணி மின்சார ரெயில்கள் இன்றும், நாளையும் பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, நெமிலிச்சேரி ஆகிய நிறுத்தங்களில் நிற்காது.
திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 10.05, 12 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் காலை 9.40 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் காலை 10.50, 12 மணி, கடம்பத்தூர்-மூர்மார்க்கெட் மதியம் 1.40 மணி ரெயில்கள் 2 நாட்களும் புட்லூர், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆகிய நிறுத்தங்களில் நிற்காது.
ஆவடி-வேளச்சேரி காலை 8.45, 12.10, 2.40 மணி, சூலூர்பேட்டை-வேளச்சேரி காலை 7.25 மணி, பட்டாபிராம்- வேளச்சேரி காலை 8.45 மணி, கும்மிடிப்பூண்டி-வேளச்சேரி காலை 8.50 மணி, திருத்தணி-வேளச்சேரி காலை 8.50 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05, 1.40 மணி, கடம்பத்தூர்-வேளச்சேரி மதியம் 12.05 மணி ஆகிய மின்சார ரெயில்கள் இன்று கடற்கரை-வேளச்சேரி இடையே ரத்துசெய்யப்பட்டுள்ளது.
வேளச்சேரி-ஆவடி காலை 10.15 மணி, வேளச்சேரி-திருத்தணி காலை 11.20 மணி, வேளச்சேரி-திருவள்ளூர் மதியம் 12.15, 2.45 மணி, வேளச்சேரி-பட்டாபிராம் மதியம் 12.55 மணி, வேளச்சேரி-அரக்கோணம் மதியம் 1.35 மணி, வேளச்சேரி-சூலூர்பேட்டை மதியம் 1.55 மணி, வேளச்சேரி-கும்மிடிப்பூண்டி மதியம் 2.55 மணி ஆகிய மின்சார ரெயில்கள் இன்று வேளச்சேரி- கடற்கரை வரை பகுதியாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.
கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் இரு மார்க்கத்திலும் இன்று காலை 9.35 மணி முதல் மாலை 4 மணி வரை முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.
கடற்கரை-வேளச்சேரி ரெயில் நாளை காலை 9.40 மணி முதல் மாலை 4 மணி வரையும், வேளச்சேரி- கடற்கரை ரெயில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரையும் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Recent Posts

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

20 minutes ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

45 minutes ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

2 hours ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

2 hours ago

ஈரோடு கிழக்கு : “வாக்கு சேகரிப்பதை விட ‘இது’ தான் முக்கியம்” முதலமைச்சர் போட்ட உத்தரவு!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த இடைத்தேர்தலில் திமுக…

3 hours ago

Live : இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…

3 hours ago