சென்னையை அடுத்த மணலி பகுதியில் எம்எம்டிஏ குறுக்கு தெருவில் வசிக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் உடையார் என்பவரது வீட்டில் கொசு விரட்டியால் தீ விபத்து ஏற்பட்டு 3 குழந்தைகள், ஒரு மூதாட்டி என 4 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உடையார் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்ததால், அவரை கவனித்து கொள்ள அவரது மனைவி உடன் இருந்துள்ளார். இதனால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள பாட்டி சந்தான லட்சுமி வீட்டில் இருந்துள்ளார்.
நேற்று இரவு படுக்கையில், கொசு விரட்டி மருந்து ‘ஆன்(ON)’ செய்துவிட்டு உறங்கியுள்ளனர் என தெரிகிறது. அப்போது இரவில் கொசு விரட்டி மருந்து இயந்திரத்தை மூலம் மின்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, 60வயதான மூதாட்டி சந்தான லட்சுமி, 10 வயதான சிறுமி சந்தியா, 8 வயதான சிறுமி ரக்ஷிதா, 7 வயதான சிறுமி சந்தான பவித்ரா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
புகை மூட்டம் அதிகமாக இருந்ததாலும், கதவு திறக்கப்படாத காரணத்தாலும் அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்த போது 4 பெரும் சடலமாக இருந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்த 4 பேர் உடல்களும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்த உறுதியான காரணங்கள் விசாரணைக்கு பின்னர் தெரியவரும் என கூறப்படுகிறது. இரவோடு இரவாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக…
காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை…
ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது.…
சென்னை :கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஸ்பான்ச் ரைஸ் கேக் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பச்சரிசி -ஒரு கப்[200…