சென்னையில் வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக மோசடி!

Default Image

சென்னையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி ஐஃஎப்எஸ் அதிகாரி  கைது செய்யப்பட்டார். பெரியமேடு பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவர் புரசைவாக்கத்தில் துணிக்கடை வைத்துள்ளார். இவரிடம் கோகுலகிருஷ்ண ஹரி என்பவர், தன்னை ஒரு ஐஎப்எஸ் அதிகாரி என்றும், பலருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய இம்ரான் தனது மைத்துனரின் வெளிநாட்டு வேலைக்காக 2 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய ஹரி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் டவுட்டன் பகுதியில் நின்று கொண்டிருந்த ஹரியிடம் பணம் கேட்ட இம்ரானை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்