சென்னையில் 41வது புத்தகக் கண்காட்சி நாளை தொடக்கம்!
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நாளை தொடங்கி வரும் 22ம் தேதி வரை 41வது புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
அனைத்து தரப்பினரையும் புத்தகக் கண்காட்சிக்கு ஈர்க்கும்
வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் இந்த வருடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார் சென்னை புத்தக கண்காட்சியின் தலைவர் வைரவன்.
இந்த வருடம் மொத்தம் 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 340 பதிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் 10 லட்சம் புத்தகங்கள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் புதிய சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் 12 வயதிற்க்குட்பட்ட பள்ளிக் குழந்தைகள் 5 லட்சம் பேருக்கு புத்தக கண்காட்சிக்கு இலவச நுழைவு சீட்டு வழடங்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகளுடன் பெற்றோர்களுக்கும் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து புத்தகங்களுக்கும் 10சதவீத கழிவு விலையில் விற்கப்படவுள்ளது.
சென்னை புத்தக கண்காட்சியின் 41ஆண்டு கால வரலாற்றில் இந்த ஆண்டு முதல் முறையாக சென்னை புத்தக கண்காட்சியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படவுள்ளது. மேலும் எழுத்தாளர்கள் பற்றிய ஆவண படங்கள் மற்றும் குறும்படங்களும் திரையிடப்படுகிறது.
source: dinasuvadu.com