நெஞ்சம் பதைபதைக்க வைக்கும் வீடியோ.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.! கமல்ஹாசன் கோரிக்கை.!
சென்னை சாலிகிராமம் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு வெஸ்ட் மின்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
17 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் 640 வீடுகள் உள்ள நிலையில் 450 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கட்டடத்தின் தரம் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டு வருவதை தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தியாக வெளியிட்டு இருந்தது. இதனை நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், வீடென்று எதனை சொல்வீர்? என குறிப்பிட்டு, நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் இந்த வீடியோவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். உறுதியற்ற இந்த அடுக்குமாடி கட்டிடம் ஆயிரக்கணக்கான உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.
தரமான வீட்டை வழங்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் வழிவகை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் தாது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
‘வீடென்று எதனைச் சொல்வீர்?’
நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் இந்த வீடியோவை தமிழக முதல்வர் @CMOTamilnadu அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். உறுதியற்ற இந்த அடுக்ககம் ஆயிரக்கணக்கான உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. தரமான வீட்டை வழங்கத் தவறியவர்கள் மீது கடும்…
— Kamal Haasan (@ikamalhaasan) August 6, 2023