செல்போன் திருடரை பிடித்த போக்குவரத்து காவல் அதிகாரிக்கு குவிந்த பாராட்டுகள் !!!!!
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் முகமது காசிம். ஈஞ்சம் பாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றில் அரபி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னையில் உள்ள சிந்தாதரி சிம்சன் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசிரியர் முகமது காசிமின் விலை உயர்ந்த செல்போனை திருடிச்சென்ற போது காவல் ஆய்வாளர் கர்ணன் என்பவர் பெரியார் சிலை அருகில் வைத்து மடக்கி பிடித்தார். இதனால் காவல் ஆய்வாளர் கர்ணன் என்பவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விசாரணையின் போது அந்த செல்போன் திருடன் தேனாம்பேட்டையை சேர்ந்த மருதுபாண்டி என்பது தெரியவந்தது. ஏற்கனவே அவன் மீது செல்போன் திருட்டு வழக்கு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.