சென்னையில் உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கம்! முதலமைச்சர் அறிவிப்பு

MK Stalin

சென்னையில் உலக தரத்தில் “கலைஞர் கன்வென்ஷன் சென்டர்” என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு .

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனை, வரலாறு குறித்து பேசி புகழாரம் சூட்டினார். இதன்பின், பேசிய அவர், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் கருணாநிதி. எனது தலைமையிலான திராவிட மாடல் அரசை கருணாநிதிக்கும், கருணாநிதியின் புகழுக்கும் காணிக்கையாக்கிறேன் என்றார்.

மேலும், சென்னையில் உலக தரத்தில் “கலைஞர் கன்வென்ஷன் சென்டர்” என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்றும் 25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரும் வகையில் உலக தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் பன்னாட்டு அரங்கத்தில் நடைபெறும், சிங்கப்பூர் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது இந்த எண்ணம் உதயமானது. மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையவுள்ளது என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்