சென்னையில் மீண்டும் தீ விபத்து.! அரசு அலுவலகத்தில் 2 பேருந்துகள் 2 கார்கள் எரிந்து நாசம்.!

fire

சென்னை ஆர்.டி.ஓ அரசு அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 4 வாகனங்கள் எரிந்தன. 

சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகமான RTO அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அங்கு சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து அறிந்து உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 30 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த்தனர். ஆனால் அதற்குள் RTO அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 பேருந்துகள் 2 கார்கள் எரிந்து நாசமாகின. இந்த தீ உருவாவதற்கான காரணம் குறித்து எம்ஜிஆர் நகர் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை சேனனி சவுகார் பேட்டையில் ஒரு தனியார் கடையில் இதே போல தீ விபத்து ஏற்ப்பட்டு இருந்தது. அங்கு மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக கூறப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்