அமலாக்கதுறை 1000 கோடி ரூபாய் மோசடி செய்த சுபிக்ஷா சூப்பர் மார்கெட்டின் உரிமையாளர் சுப்ரமணியனின் 4.92 கோடி ரூபாய் சொத்தை முடக்கியுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட், சுப்ரமணியன் என்பவரால் தொடங்கப்பட்டது. 1600 கிளைகள் கொண்டிருந்த சுபிக்ஷா சூப்பர் மார்க்கெட் பெயரில், நாடு முழுவதும் மேலும் 2000க்கும் மேற்பட்ட கிளைகள் தொடங்கப் போவதாகக் கூறி 13 வங்கிகளில் 890 கோடி ரூபாய் வரை அவர் கடன் பெற்றுள்ளார். மேலும் தொழில் தொடங்க பங்குதாரராக சேர்ப்பதாகக் கூறி 150 கோடி ரூபாய் வரை ஏமாற்றிவிட்டதாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததையடுத்து, பொருளாதாரக் குற்றப்பிரிவினர் சுப்ரமணியம் மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு சுபிக்சா கடைகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வங்கிகளில் வாங்கிய பணத்தைக் கொண்டு பல்வேறு சொத்துக்களை வாங்கியதாக 2015-ல் அமலாக்கத்துறையினர் சுப்ரமணியன் மீது வழக்கு பதிவு செய்தது. குறிப்பாக பாங்க் ஆஃப் பரோடாவில் 77 கோடி ரூபாய் கடன் வாங்கி அதனைக்கொண்டு சொத்துக்களை வாங்கிய குற்றச்சாட்டில், முதற்கட்டமாக நீலாங்கரையில் 4.55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த வழக்கில் சென்னையில் வைத்து கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரமணியனைக் அமலாக்கதுறை கைது செய்தனர். தற்போது சென்னையில் மேலும் 4.92 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 சொத்துக்களை அமலாக்கதுறையினர் முடக்கியுள்ளது. இதுவரை 9.5 கோடி ரூபாய் வரை சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…