மீன் பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நிவாரணம் வழங்கக்கோரி மனு !
சென்னை உயர்நீதிமன்றத்தில்,மீன் பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நிவாரணம் வழங்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காலத்தில் மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுவதாகவும், இது நாளொன்றுக்கு 82 ரூபாய் மட்டுமே என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடும்பத் தேவைகளுக்கு போதாது என்றும் கூறப்பட்டுள்ளது.
வெவ்வேறு மீன் இனங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்வதாகவும், மீன்பிடி தடைக்காலத்தில் மீன் வளம் அதிகரிக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.