மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் : அம்பத்தூர்
மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் அம்பத்தூர் மண்டலத்தில் வீட்டு வரியை குறைக்க வலியுறுத்தி அம்பத்தூர் மண்டல அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுந்தர்ராஜ் தொடங்கிவைத்தார்.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்து சுகாதார மையங்களிலும் மருத்துவர்களை நியமித்து மாத்திரை, மருந்துகளை கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும், அத்திப்பட்டு கலைவாணர் நகர் பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பை மேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், குடிநீர் தட்டுப்பாடு, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்கவேண்டும், அம்பத்தூர், மேலும் கொரட்டூர் ஏரியில் கலக்கும் கழிவு நீரை தடுத்து நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் பங்குபெற்ற பகுதி செயலாளர் பாலுச்சாமி பேசுகையில், ‘‘அம்பத்தூர் மண்டல அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. ஆனால் ஒரு முறை கூட மண்டல உதவி ஆணையாளர் போராடுவோரிடம் நேரடியாக கோரிக்கை மனுவை பெறுவதில்லை. மாறாக ஆர்ப்பாட்டம் நடக்கும் அன்று அலுவலகம் வராமல் தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளிக்கும்படி சொல்லுகிறார். அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணிக்கிறார். விரைவில் முன் அறிவிப்பின்றி அவருடைய அலுவலக அறையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’’ என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்வாகிகள் அதிகாரிகளை சந்தித்து அளித்தனர்.