மனைவியை கொன்ற கணவர்..!!
சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு 2 நாட்களாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். திருவிக நகர் வசித்து வந்த ரயில்வே ஊழியரான சுரேஷ் என்பவரின் மனைவி மயக்கமடைந்ததாகத் தெரிவித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை சோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது கழுத்தில் காயம் இருந்ததைக் கண்டு காவல்துறைக்கு புகார் அளித்ததையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மனைவின் கழுத்தை நெறித்து கொலை செய்ததை சுரேஷ் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
DINASUVADU