சென்னை எம்.கே.பி. நகர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர், உயிரிழந்த சம்பவம்அப்பகுதியில் பதற்றத்தைஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களைதவிர்க்கும் விதமாக காவல்நிலையத்திற்குபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சோழவரம் அருகே சாலமன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டப்பட்டு வந்த கார்த்திக், சொந்த ஊரான திருவாரூரில் தங்கி பணி புரிந்த வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தங்கை திருமணத்திற்காக சென்னை வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் மற்றும் அவரது நண்பர் அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்களிடம் கத்தி இருந்ததால், அவர்களை எம்.கே,பி. நகர் காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தலைமறைவாக இருந்த கார்த்திக் சென்னை வந்தது தெரிந்தவுடன் அவரை விசாரணை செய்ய அழைத்து வந்ததாகவும், அப்போது அவர் மதுப்போதையில் இருந்ததால் உடல் நிலை சரியில்லாமல் இறந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினரின் விளக்கத்தை மறுத்துள்ள கார்த்திக்கின் உறவினர்கள், கடந்த ஒராண்டாக அமைதியாக இருந்து வந்த கார்த்திக்கை விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்று விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், போலீசாரை கண்டித்து அம்பேத்கர் சட்ட கல்லூரி அருகே கார்த்திக்கின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீசார், நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக எம்.கே.பி. நகர் காவல்நிலையத்தைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
DINASUVADU
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…