"போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு" போலீஸார் அடித்து கொன்றதாக புகார்..!!

Default Image

சென்னை எம்.கே.பிநகர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர்உயிரிழந்த சம்பவம்அப்பகுதியில் பதற்றத்தைஏற்படுத்தியுள்ளதுஅசம்பாவிதங்களைதவிர்க்கும் விதமாக காவல்நிலையத்திற்குபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சோழவரம் அருகே சாலமன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டப்பட்டு வந்த கார்த்திக், சொந்த ஊரான திருவாரூரில் தங்கி பணி புரிந்த வந்த நிலையில்,  2 நாட்களுக்கு முன்பு தங்கை திருமணத்திற்காக சென்னை வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் மற்றும் அவரது நண்பர் அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்களிடம் கத்தி இருந்ததால், அவர்களை எம்.கே,பி. நகர் காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.காவல்நிலையத்தில் வைத்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் திடீரென கார்த்திக்கிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கார்த்திக் வாந்தி எடுத்ததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார்த்தியை போலீசார் அனுமதித்தாக தெரிகிறது. சிகிச்சையின் போது நெஞ்சு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்ல போலீசார் முயன்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக்கின் உயிர் பிரிந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தலைமறைவாக இருந்த கார்த்திக் சென்னை வந்தது தெரிந்தவுடன் அவரை விசாரணை செய்ய அழைத்து வந்ததாகவும், அப்போது அவர் மதுப்போதையில் இருந்ததால் உடல் நிலை சரியில்லாமல் இறந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினரின் விளக்கத்தை மறுத்துள்ள கார்த்திக்கின் உறவினர்கள், கடந்த ஒராண்டாக அமைதியாக இருந்து வந்த கார்த்திக்கை விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்று விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், போலீசாரை கண்டித்து அம்பேத்கர் சட்ட கல்லூரி அருகே கார்த்திக்கின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீசார், நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக எம்.கே.பி. நகர் காவல்நிலையத்தைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்