டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
பின்னர் சென்னையை அடுத்த திருவிடந்தையில் 14ஆம் தேதி வரை பாதுகாப்புத்துறை கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக 268 ஏக்கர் பரப்பளவில் சுமார் 670 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் 47 நாடுகளின் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தியா சார்பில் டாடா, எல் அண்ட் டி, மஹிந்திரா, டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல்., பி.இ.எல். உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.
விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கி, கார் மூலம் கண்காட்சி மைதானத்திற்கு செல்கிறார். பாதுகாப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமான திறந்து வைத்து முப்படைகளின் சாகச நிகழ்ச்சிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார். நண்பகல் 12 மணியளவில் மாமல்லபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் இறங்கி, தற்காலிக சாலையின் வழியே கேன்சர் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்புகிறார். பின்னர், பிற்பகல் 2 மணியளவில் விமான நிலையத்திலிருந்து அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
தற்போது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.பிரதமருக்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர் . விமானநிலைய வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…