நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் கைது!சென்னையில் போலீசாரின் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததன் எதிரோலி!
போலீசாரின் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை சென்னை தியாகராயர் நகரில் உடைத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
தியாகராயர் நகர் பேருந்து நிலையம் எதிரே மாம்பலம் போலீசார் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது சில நபர்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பியோடிவிட்டனர். மாம்பலம் காவல் நிலையம் அருகில் இருந்தும் தப்பியோடிய நபர்களை அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கண்டறிந்தனர்.
திருவல்லிக்கேணியை சேர்ந்த கார்த்திக் என்ற இலைஞரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாகவுள்ள மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கடந்த வாரம் திருவல்லிக்கேணியில் நடந்த நாம் தமிழர், போலீசார் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.