நாடு முழுவதும் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் !
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ , நாடு முழுவதும் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பூ, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடி தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.