நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் நடவடிக்கையா? – நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நடிகர் !

சென்னை:நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு.
நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி,நடிகர் மகாகாந்தி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,”மருத்துவ பரிசோதனைக்காக நான் மைசூர் செல்வதற்காக நவம்பர் மாதம் இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்,அப்போது,திரைத்துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன்.
ஆனால்,என்னுடைய வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தியும்,எனது சாதியையும் பற்றி தவறாகவும் பேசினார்.
குறிப்பாக,விமான நிலையத்திலிருந்து வெளியேறிய என் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கினார்.ஆனால்,மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்பப்பட்டது. எனவே,நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025