தலையில் கல்லை போட்டு சென்னை காசிமேட்டில் ரவுடி கொலை…!
தலையில் கல்லைப் போட்டு சென்னை காசிமேட்டில் ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மற்றொரு ரவுடியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காசிமேடு சிங்கார வேலர் நகரைச் சேர்ந்த பிரவீண் குமார் என்ற அஜித் நேற்றிரவு மதுபோதையில் அந்தப்பகுதியில் உள்ள சுரங்கப் பாதை வழியாகச் சென்றதாகவும், அங்கு அதேபகுதியைச் சேர்ந்த சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மது அருந்திக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக பிரவீணுக்கும், சுரேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பிரவின் குமாரை கீழே தள்ளிய சுரேஷ் பெரிய கல்லால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. சுரேஷை தேடி கண்டுபிடித்து கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரவீண் குமார், சுரேஷ் ஆகியோர் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.